இவ்வளவு வக்கிரம் ஏனோ?

இப்படி ஒரு தனி தலைப்பு ஆரம்பித்தற்கு முதலில் அட்மின் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். சைவமா அசைவமா என்ற வாதத்தில் உள் நுழைய எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை. அதற்கு என்னால் பதில் கொடுக்காமல் இருக்கவும் முடியவில்லை.

ஹரிராம் என்ற நபர் (அவரை நண்பர் என்றோ சகோதரர் என்றோ அழைத்தால் என்னையே நான் மதிக்கவில்லை என்று ஆகிவிடும்) எப்படி இவ்வளவு வக்கிரமாக யோசிக்கிறார்?? இது நிஜமாக ஒருவரால் முடியுமா?? எனக்கு அந்த பதிவை படித்து விட்டு இரவுல் முழுவதும் தூக்கம் இல்லை. கண்ணை மூடினால் குழந்தையின் கழுத்தை அறுத்து பாருஙகள் என்று சொன்னதே நினைவுக்கு வந்து மிகவும் டிஸ்டர்ப்ட் ஆனேன். சினிமாவில் இப்படி கூட வில்லன்கள் இருப்பார்களா என்று யோசிப்பேன். இப்போது நிஜமாக பார்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது வெறும் இணைய தளம்தான் இதற்காக ஏன் மனம் வருந்த வேண்டும் என்பது எல்லாம் பேசுவதுற்கு வேண்டுமானால் சுலபம் ஆனால் நடைமுறையில் மிகவும் கடினம்.

இப்ப்டி எல்லாம் செய்தால் மக்கள் இந்த சைட்டுக்கு வராமல் இருந்து விடுவர்கள் என்று நினைப்பா? அப்படி இந்த தளத்தையும் அதை நடத்துபவரையும் கேவலமாக பேசுவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்கள் தொழிலில் முன்னேற வேண்டும் என்றால் அதற்காக உழைக்கட்டும். நிறைய தமிழ் தளங்கள் இருந்தால் நம் போன்ற மக்களுக்குத்தானே நல்லது? இதை ஏன் மறக்கிறார்கள்?

ஜொள்ளு அட்மின் என்றெல்லாம் கேவலமாக பேசுவதில் என்ன வக்கிரமான சந்தோஷம் கிடைக்கும்? அட்மின் எல்லாரையும் அக்கா தங்கை தம்பி என்று அழைக்கிறாரே அவரை போய் ஜொள்ளு என்றெல்லாம் எப்படி கூப்ப்பிட முடியும்? அக்கா தங்கைகளாக நினைப்பவர்களிடம் வழிய முடியுமா? இப்படி நினைப்பவர்கள் அப்படி நடந்து கொள்வார்களோ? இப்படி எல்லாம் பேச எனக்கு கஷ்டமாகதான் இருக்கிரது ஆனாலும் மிகவும் மனம் வருத்தத்துடன் இருக்கிரேன் அதனால் சொல்ல வேண்டிய கட்டாயம்.

ஒன்று மட்டும் சொல்லிகொள்ளுகிரேன். நீங்கள் அட்மின் அவர்களை மட்டும் கேவலமாக பேசவில்லை. இங்கு வருகை தரும் என் போன்ற எல்லாரையும் கேவலமாக பேசுகிரீர்கள். ஏன் என்றால் அட்மின் ஜொள்ளு விட்டால் இங்கு மறு முறை யாராவது வருவார்களா?? மறுபடி மறுபடி எல்லாரும் வருவதில் இருந்தே உங்களுக்கு எல்லாம் தெரியவில்லையா நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் என்று??

உங்கள் வக்கிரங்களை காட்ட உங்களுக்கு என்றே நிரைய தளங்கள் இருக்கின்றன. அங்கே சென்று உங்கள் எழுத்து புலமையை காட்டுங்கள். இது ஒரு குடும்பத்தினரின் குடும்ப தளம் இதை மாசு படுத்தாதீர்கள்.

நான் நிறைய பேசி இருந்தால் எல்லாரும் என்னை மன்னிக்கவும். நெஞ்சு பொறுக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை எண்ணி!

உமா

எங்க போயிருந்தீங்க இவ்வளவு நாள்?? நேத்து தான் யோசிச்சேன் ஆளையே கானம்னு...எப்படி இருக்கீங்க?

நான் இந்தப் பேத்தல்களை படிக்கவில்லை. அறுசுவைக்கு வந்தோமா குறிப்புகளைக் கொடுத்தோமா, ஆரோக்கியமாக விவாதித்தோமா என்றெல்லாம் இல்லாமல். என்ன கொடுமை இதெல்லாம்.
சிலர் எப்படி என்றால் தானும் நல்லது எதுவும் செய்ய மாட்டார்கள். மற்றவர்கள் செய்வதையும் பொறுக்கமாட்டார்கள். மறப்போம், மன்னிப்போம் என்று சொல்லலாம் என்றால் அதுவும் முடியவில்லை. ஏன்னா மன்னிப்பு ஒரு முறைதான் வழங்க முடியும். எப்போதும் வழங்க முடியாது
அன்புடன்
ஜெயந்தி

உமா கவலைப் பட வேண்டாம் என்று நான் சொன்னாலும் சும்மா மத்தவங்களுக்கு ஆறுதலுக்கு தான ானால் எனக்கும் இதே நியாபகம் தான்....எப்படி கொலை செய்ய மனசு வருதோ மனுஷங்களுக்குன்னு நினைப்பேன்..ஆனா இவ்வளவு வக்கிரமாக எழுதுபவர்கள் கொலை அல்ல அதற்கு மேலும் செய்வார்கள்....இதையே நெனச்சுட்டு இருக்க வேண்டாம் மறக்க ட்ரை பன்னுங்க உமா.

மேலும் சில பதிவுகள்