ஓடியாங்க, ஓடியாங்க இங்கிட்டு ஓடியாங்க

எல்லாரும் இங்க வாங்க:-)
வந்து கடிச்சிட்டு போங்க:-)
சிரிச்சி சிரிச்சி பேசலாம்!
சிந்திச்சு பேசலாம்!!
கதயடிச்சி பேசலாம்!
கவிதையும் பேசலாம்!!

வாங்கப்பா, எல்லோரும்,
ஒரே கண்டிஷன் இருக்கு :-)
இங்க வந்தா ஒரு பதிவு போட்டுட்டு தான் வெளிய போகனும்.
சண்ட எல்லாம் போடக்கூடாது. எது வேணும்னாலும் பேசலாம். யாரையும் புண்படுத்தாம பேசனும்.

ஓடியாங்க, ஓடியாங்க இங்கிட்டு ஓடியாங்க.
சிரிக்க மட்டுமே வாங்க,
சிந்திக்க வைக்கவும் வாங்க:-)

ஹ ஹா ஹான்னு கேக்கனும் வெளிய போகும் போது.

ரூபி(தளிகா), அஸ்மா(இவ்ளோ ஜாலி பார்டின்னு தெரியாம போச்சே:-)), மனோகரி மேடம், செல்விமா, நம்ம வானதி அக்கா, அவங்க தங்கை மாலினி அக்கா(!!:-)), ஹேமா பொண்ணு, முத்துலக்ஷ்மி தங்கச்சி(ஓகேவா:-)), அனிதா, அபர்ணா, நர்த்தனா, மாலதி மேடம், கமலா மேடம், திவ்யா செல்லம், அம்பிகா தலைவி இன்னும் எல்லாரும். நான் அப்பப்பொ வந்து விடுபட்ட எல்லார் பேரையும் சேர்த்திடறேன் :-).

ஒரு விஷயம் சொல்ல மறந்த்துட்டேன். சமையல் சம்பந்தமா பேசனும். நாம சமைக்கும் போது நடக்கற விஷ்யங்களும் அதில் நாம ரசிச்ச விஷயங்கள் கூட நிறைய இருக்கும்:-) அந்த விஷயங்களையெல்லாம் இங்க சொல்லுங்க. நாமெல்லாம் சிரிச்சு, தெரிஞ்சுக்கலாம்:-)
உ.தா: ரூபி, சொல்லி இருந்த ட்ரம்ஸ்டிக் ஜோக்....இது போல நிறைய நடந்தீருக்கும், நடக்கும். அப்படி நடக்கும் போது உடனே வந்து இங்க போடுங்க உங்க பதிவை. சரீங்களா. எல்லாரும் ஒன்னா சேர்ந்து சிரிப்போம்.

சிரிச்சே ரொம்ப நாளாச்சு. அதனால தான் இந்த பதிவு:-) "வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க" த்ரெட் போய் இப்ப படிச்சாலும் சிரிப்பு தானா வருது. அந்தா நாட்களெல்லாம் மறந்து போச்சு. திரும்பவும் அதே போல சிரிக்கலாம், வாங்கப்பா :-)

வந்து சிரிக்கறா மாதிரியும் சிந்திக்கற மாதிரியும்ம் கத எழுதுங்கப்பா :-)

யார் எப்ப வந்தாலும், இந்த த்ரெட் திறந்தா சிரிக்கனும். சரீங்களா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

என்ட்ரும் போல் காலயில் புதிதாக டிக்காஷன் போட்டு பால் காய்ச்சி காப்பி தயாரித்தேன்.கணவர் ரெடியாக ட்ய்னிங் டேபிளில் உட்கர்ந்திருக்கிரார்..ஆத்தினவுடன் காப்பி திரைந்துவிட்டது.பால்காரனை திட்டிகொண்டே போய் வீண்டும் ஒரு பாக்கெட் பால் வாங்கி வந்தார்.மறுபடியும் அதே போல் ஆகிவிட்டது.எனக்கு ஒன்ட்ருமே புரியவில்லை.சிரிது நேரம் யோசித்து சர்க்கரயில்தான் பிரச்சினை என்ட்ரு கண்டுபிடித்தேன்.முன் தினம் க்ரேப் ஜுஸ் தயாரித்து விட்டு சிரிது சிட்ரிக் ஆசிட் டேபிளில் வைத்திருந்தேன்.அதை பார்த்தால் அப்பொழுது காணவில்லை.சொல்லிக்கொன்டிருக்கும்போது என் கணவர் கூருகிரார் சர்க்கரயை இப்படி போட்டுவைத்திருக்காளே என்ட்ரு நினைத்து நான் தான் சர்க்கரை டப்பாவில் அதை கொட்டி வைத்தேன்னு.சிட்ரிக் ஆசிடை சர்க்கரைன்னு நினைச்சுட்டார்.இது பத்து வருடஙளுக்கு முன் நடந்தது.இன்ட்ரு நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வரும்.

Today is a new day.

தோழிகளே.... தல தீபாவளி கொண்டாட்டம் சண்டையில் தான் முடிந்தது...அப்புரம்.. எல்லாரும் எப்படி இருகிங்க ..என்னால் சிலவற்றை நம்பவும் முடியவில்லை.... நம்பாமலும் இருக்க முடியவில்லை....வாக்கெடுப்பு விவாதத்தை தான் சொல்கிறேன் ......மனதிற்கு கஷ்டமா இருக்கு. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.....

தீபாவளி முடிஞ்சசு ....எங்க வீட்டில் ஒரே திட்டு...நான் இந்த தளத்திற்கு அடிக்ட் அயிட்டடேனாம் .....நான் ஒர்குட் க்கும் அடிக்ட்......நான் இப்போல்லாம் என் யாஹூ இன்போக்ஸ் குட பார்ப்பதில்லை....அவ்ளோ தூரம் அறுசுவை என்னை வசியபடுதிடுசசு

தீபாவளி முந்தின நாள் இரவு நாலு மணி வரை அறுசுவை தான் படித்தேன் (வாக்கெடுப்பில் உள்ள அனைத்தையும் திரும்பி திரும்பி படித்தேன்....என்னால் நம்ப முடியவில்லை.....ஏன்...இப்படி ..என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை...)...... ஒரே திட்டு ......இனி அறுசுவை படிப்பதில்லை என்று சத்தியம் வாங்கும் அளவுக்கு... போய்விட்டது ..... என்னவர் நெட் கனெக்சன் ரிமொவ் பண்ண போறேன் .....
அப்போ குட நான் விடல ஒயர்லேய்ஸ் உஸ் பண்ணுவேன்னு சண்டை....

எல்லாம் படித்து கொண்டுதான் இர்ருக்கேன்...பதில் போட டைம் இல்லை...நாளை லிவ் ....மறுபடியும் திங்கள் சந்திப்போம்.....

நர்த்தனா ஹர்ஷினி உன்ன பென்ச் மேல ஏறி நிக்க வேக்க போரா பாரு....இங்க வந்து சிரின்னா குண்டு போடரியே:-)
எங்க வீட்லயும் ஒரே திட்டு இனி இங்க வரக் கூடாதுன்னில்ல....என்னுடைய மூட் 2 வாரமா குழந்தையையும் கவனிக்காம எதுவும் மன்டைல ஏறாம சமையலும் ஒழுங்கா செய்யாம வெறும் பைத்தியம் மாதிரி இருந்தேன்...அவர் ஒன்னு சொன்னார் நீ எதை பாப்பியோ என்ன செய்வியோ தெரியாது இன்டெர்னெட்டை பொறுத்தவரை எல்லாத்தையும் எதிர்ப்பார்க்கனும்..இன்னும் ஸ்கூல் மாதிரி நெனப்புல இருக்காதன்னார்...இதையெல்லாம் ஏத்துக்கர மனப்பக்குவம் இல்லாட்டி நீ கலந்துக்காதன்னார்.
நர்தனா சண்டையெல்லாம் போடாதீங்க அவர்ட...எப்பவும் போல் இருங்க...நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்...எனக்கு மனசில் இருந்து போகாம சும்மா அழுகையா வருது...
சரி சரி உன்னை சொல்லிட்டு நானும் பொலம்பரேன்..சொன்னா தீரமாட்டேஙுது அதான்..
சரி ஹர்ஷினி நான் யோசிச்சு நல்ல காமெடி இருந்தா போடரேன்..நர்தனா மனசை முன்னைப் போல் வருவோமா பேசுவோமா சிரிப்போமா எதையாவது தெரிஞ்சுக்குவோமான்னு இருந்துட்டா எந்த ப்ரச்சனையும் இல்ல.சரியா

முடியல்லை தளிகா.... சரி ஹர்ஷினி அடிச்சாலும் அடிப்பா(ஒருமைல சொல்லலாமா )...என்ன சொல்ல? சரி...
நான் குலப் ஜாமுன் செய்தேனா..சூட்டுடன் அதை தூக்கி சிரப் இல் போட்டேன். காலையில் பார்த்தல் .... சிரபே இல்லை. என்னவர் ஒ இது தான் அதுவா?(வடிவேலு விசிறி .... அந்த பாணியில் சொன்னார்.).எதுன்ன்னேன் ? சிரித்தார்...இன்னும் ஒன்னு குடஎடுத்து வாயில் போட வில்லை நானும் தான். அப்புறம், உளுந்த வடைக்கு வருவோம்.... மாவு ரெடி... சுட்டேன் ... அதில் ஓட்டை போட முடியவில்லை.. ஒட்டிக்கொண்டு வந்தது ... அதனால் அப்பம் அப்பம் போல சுட்டேன். ...சுவைய இருந்தது ....அதுக்கும் பார்த்து பார்த்து ஒரே சிரிப்பு...
என் மாமியாரிடம் பேசினேன்... என்னமா செய்தே ..... நான் அதிரசம் சூட்டேன் என்றேன்...(சுட்டேன் ... கருகி வந்தது.... அப்புறம் நல்ல வந்தது).... எத்தனை சுட்ட என்றார்...ஆறு என்றேன் எ அப்பா அவ்ளோ சுட்டிஇயன்னர் ....

முந்தி ஒருநாள்....எனக்கும் அவர்க்கும் சண்டை...என்னை திட்ட அவருக்கு தெரியாது. கோவம் வந்தால் வாயை முடிகொண்டு என்னிடம் பேசாமல் இருப்பார்... அது தான் அவர் எனக்கு தரும் தண்டனை...என்னால் அவரிடம் பேசாமல் இருக்க முடியாது...வீக்நேச்ஸ்....... நான் சரி வாயாடி...

அப்புறம்... போர் அடிக்கோ...இன்னும் வாசிங்கோ...
பொதுவா வெளிநாட்டில் வாழும் நமக்கு பிரச்சனையே ஊரில் இருந்து வரும் போன் தான் . அன்றும் அப்படி தான் சண்டையின் நடுவில் அவர் என் மேல் உள்ள கோபத்தில் காட்லேஸ் செட்டை தூக்கி எறிந்தார் ... பாவம் அது சோபாவில் விழுந்து உயிர் பிழைத்து கொண்டது ... இவருக்கு கோவம் பொறுக்க வில்லை. மறுபடியும் அதை எடுத்து தரையில் எறிந்தார் .. என்னாச்சு இப்போ?
உடைந்தது உயிர் பிரிந்தது...

இது மற்றுமொரு காட்ல்ஸ் சின் கதை......

அன்றொரு நாள் ...நான் அவரும் காதலர்களாக இருந்த போது .....ம்ம்ம்ம் இப்போ ஒன்னும் இல்ல...ம்ம் கடைக்கு வருவோம்....எங்களது வித்தியாசமான கல்யாணம்.... வெளிநாட்டு மாப்பிளை என்றால் கல்யாணம் அன்றுதான் பர்கமுடியும் .... ஆனால் நான் அதை விரும்ப வில்லை. நான் இவரை பர்கமலே யே சம்மதம் சொன்னேன். என்னினும் என் விருபப்திருகேரிப வந்தார் . ஓகே அது எல்லாம் அப்புறம்...

இங்கே கதை... அப்போ இவர் ஒரு நாளுக்கு அரை மணிக்கு ஒஎஉ தரம் போன் பண்ணுவார். ... அப்போ ஒருநல் ... அவர் வந்துட்டார் அப்புறம் சொல்றேன்... திங்கள்..

நர்த்தனா இதிலிருந்து என்ன புரியுதுன்னா நீங்களும் உங்க கனவரும் இன்னும் குழந்தைக மாதிரி இருக்கீங்க...கார்ட்லெசை மறுபடி எறிஞ்சது நெனச்சா சிரிப்பு தான்

ஸ்கூலில் படிக்கிரப்ப எஙளுடன் முன்னே படித்த தோழியின் வீடு மேல்மாடியில்...நானும் என் மற்றொரு உயிர்தோழியும் ஒன்றாய் வெளியே செல்வது வழக்கம்...முன்னால் தோழியின் வீட்டு வழியே பலசமயன் செல்ல வேன்டி இருப்பதால் அவள் மேலிருந்து எங்களை பார்த்து 1 மணிநேரத்துக்கு பேசுவாள்(ப்லேட்).
அவளே பாக்காட்டியும் நானே மேலே அவ கூப்பிடுராலா இல்லையான்னு பாத்து மாட்டிக்குவேன்..ஆன்னக்கி என் தோழி என்கிட்ட" என் கூட வர்ரதா இருந்தா அவ வீட்டுக்கு மேல பாக்க மாட்டேன், ஒழுங்கா நேராபாத்து போயிடுவேன்னு சத்தியம் பன்னு"ன்னா..நானும் சரின்னேன்....எனக்கு ஒரு சுபாவம் தெரிஞ்சவங்களை பாக்காத மாதிரி போகத் தெரியாது....சரின்னு அவ வீட்டுக்கு பக்கம் வந்ததுன் எனக்கு திரும்ப கண் மேல போச்சு ஆனா அங்க தோழி இல்ல அப்ப சந்தோஷமா' இன்னக்கி யாரும் இல்ல மேல அப்ப இனி நீ எங்க அறுவைய கேக்க வேண்டாம்னு இளிச்சுட்டே முன்னாடி பாத்தா முன்னால் தோழி என் கண்ணு முன்னாடி இதையெல்லாம் கேட்டுட்டு நிக்கிரா..என்னக்கும் மேல நிக்கிரவ அன்னக்கி கீழ நின்னிருக்கா.....அய்யோ அன்னக்கி நான் வழிஞ்சு சிரிச்ச சிரிப்பிருக்கே இன்னைக்கும் என் தோழி எப்படி சிரிச்சேன்னு காமிப்பா.

தளிகா:-)

உம்மிக்கரி தெரியுமா உங்கள்கு?
உம்மியை கரியாக்கி பாத்திரம் தேய்க்க, பல் தேய்க்க் வெப்பாங்க..
என் பாட்டியின் அக்காக்கு கண்ணு அவ்வளவா தெரியாது...அன்னக்கி மாமாவின் கல்யானமப்ப பாட்டி காலையில் நேரமா எழுந்து உம்மிக்கரியை டீத்தூள்னு நெனச்சு போட்டு கொதி கொதியோன்னு கொதிக்க வெச்சு டீயாக்கி வயசானவங்கள்கெல்லாம் கொடுக்கா எல்லாரும் முகம் சுளிக்க..ஒரு சிலர் டீ நல்லா இல்லைன்னு எப்படி சொல்லங்கர கஷ்டத்தில் முழுசா டீயையும் குடிக்க பாட்டியே குடிச்சு பாத்துட்டு தாஅன் ஏதோ அசம்பாவிதம்னு புரிஞ்சு எங்கள்ட கேட்டப்ப கெக்கெபெக்கேன்னு ஒரே சிரிப்பு..உம்மிகரியை டீத்தூள் வெக்கிர இடைத்தில் வெச்ச ஆளு நான் தான்:-D

தளிகா:-)

எங்கள் பக்கத்து வீட்டு வாண்டு பைய்யன் எங்கள் வீட்டிலேயே இருப்பான் என் பின்னாடியே அக்கா அக்கான்னு சுத்துவான்..ஊருக்கு போரப்ப என் கூட வரனும்னு அடம்புடிச்சு நாஙளும் கூட்டிட்டு போனோம்..கேரளாவில் சளின்னா சேறு....நம்ம ஊரில் ஜலதோஷம்...
அவனுக்கு ஊர் தன்னி சேராம ஜலதோஷம் பிடிக்கவே கடையில் போய் மருந்து வங்கிட்டு வரேன்னு போனான்...அங்க போய் அவங்கள்ட " சளிக்கு விக்ஸ் இன்டோ "ன்னு கேக்க...கடைக்காரர் தமிழன் தான்னு தெரிஞ்சு படிலுக்கு சிரிச்சுட்டே" சளிக்கு விக்ஸ் இல்லா லக்ஸ் இண்டு"ன்னு சொல்லியிருக்கார்..இவன் வெக்கத்தில் ஓடி வந்துட்டான் என்னன்னு புரிஞ்சு.இப்பவும் அவனுக்கு அதை சொன்னா கோவம் வரும்:-D

மேலும் சில பதிவுகள்