தேங்காய்பால் அல்வா

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

தேங்காய் - ஒன்று
பால் - 1 3/4 கப்
சீனி - 150 கிராம்


 

தேங்காயை பூவாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சீனியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு, முதலில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தேங்காயின் வெள்ளை நிற பூவை மட்டும் போட்டு அரைக்கவும். அதில் உள்ள அடிபகுதியை சேர்த்து அரைக்க கூடாது.
தேங்காயை அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அந்த சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து வடிகட்டி, மீண்டும் இதைப் போல அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 1 3/4 கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் தேங்காய் பால், பால், மற்றும் சீனியை சேர்த்து அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறாமல் விட்டால் பொங்கி வந்து விடும்.
தீயை மிதமாக வைத்து பாலை நன்கு 35 நிமிடம் வரை கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் ஹல்வா பதம் வந்தவுடன் இறக்கி விடவும். இதற்கு நெய் தேவையில்லை.
சுவையான தேங்காய் பால் ஹல்வா தயார். இதை சிறு சிறு உருண்டையாகவும் உருட்டி மிட்டாய் போல செய்து வைக்கலாம்.
தேங்காய்பால் அல்வா செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தேங்காய் பால் அல்வா

மேடம் நாங்க நேற்று எஙக வீட்டீல் செய்தோம். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்