எண்ணெயில்லாத சப்பாத்தி

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து, மாவு தொட்டுக் கொண்டு, மெல்லிய பெரிய சப்பாத்திகளாக இடவும்.
தோசைக்கல்லில் தேய்த்த சப்பாத்தியை போட்டு, சூடேறியதும் திருப்பிப் போட்டு, மறுபக்கமும் சூடேறியதும் எடுத்து, தோசைக்கல்லை எடுத்து விட்டு தணலில் நேரடியாக போடவும்.
உப்பி வந்ததும் இடுக்கி கொண்டு திருப்பிப் போட்டு, மறுபுறமும் சுட்டதும் எடுக்கவும் (தீயாமல் கவனமாக எடுக்கவும்).


4, 5 சப்பாத்திகள் வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் இப்படிதான் செய்வேன். ஆனால் எண்ணெய் சிறிதும் சேர்க்க மாட்டேன். இன்று நீங்கள் சொன்னது போல் எண்ணெய் சேர்த்து செய்தேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுப்பர்'அ வந்தது... படம் எடுத்து நம்ம பாபு அண்ணா'க்கு அனுப்பியாச்சு. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
பாராட்டுக்கு நன்றி. படத்தோடவா, ம்... அசத்துங்க. பாபு தான் பாவம், எத்தனை போட்டோவ போடுவார்னு தெரியல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நேற்று இரவு எண்ணெய் இல்லாத சப்பாத்தி

நன்றி செல்வி மேடம்

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி தோழி சீதாலக்ஷ்மி,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேடம் உங்களோட எண்ணையிலா சப்பாthதி செய்துவிட்டேன்.தொட்டுக்கொள்ள உங்க தக்காளி குருமா சூப்பரா இருக்கு.நான் இன்னும் சாப்பிடலை.எப்படியும் இந்த பதிவை நீங்க பார்க்கும்போது சாப்பிட்டிருப்பேன்:-)

அன்பு தோழி, எண்ணெயில்லாத சப்பாத்தி, சுலப காய்கறி பால் குருமா செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது.

அன்பு தோழிகளே,

ஹாய் விஜி,
பாராட்டுக்கு நன்றி. எங்கள் வீட்டில் தினமும் செய்யும் சிற்றுண்டி இது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.