மிக்ஸ்டு பயறு சுண்டல்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பயறு - 20 கிராம்,
கொள்ளு - 20 கிராம்,
டபிள் பீன்ஸ் - 20 கிராம்,
சோயா பீன்ஸ் - 20 கிராம்,
மொச்சை - 20 கிராம்,
எள்ளு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
சீரக தூள்- 1/4 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

எல்லா பயறுகளையும் ஒன்றாக காலையில் ஊற வைக்கவும்.
மாலையில் ஊற வைத்த பயறுகளை, குக்கரில் 5 விசில் விட்டு, வேக விட்டு எடுக்கவும்.
காய்ந்த மிளகாய், எள்ளை வெறும் வாணலியில் வறுத்து, பொடிக்கவும்.
வெந்த பயறுடன் சீரகத்தூள், பொடித்த பொடி, உப்பு, கலந்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்