தேதி: November 12, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - 250 கிராம்
கடலை மாவு - 125 கிராம்
தனியா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு அதில் 2 ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, ஓமம், பேக்கிங் பௌடர் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்திக் கல்லில் வைத்து வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொண்டு வட்டமாக தேய்த்த சப்பாத்தி மாவின் நடுவில் வைத்து, மாவை நன்றாக மூடி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும்.
பிறகு அதை ஒரு கத்தியினால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
முறுக்கு, மிக்ஸர் மாதிரி இதுவும் ஒரு நொறுக்கு தீனி. இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.