கேழ்வரகு முறுக்கு

தேதி: November 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (7 votes)

 

கேழ்வரகு மாவு - 2 கப்
கடலை மாவு - ஒரு கப்
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்


 

கேழ்வரகு முறுக்கு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் கடலை மாவு போட்டு சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கரண்டியில் அல்லது வாணலியில் டால்டாவை போட்டு உருக்கி, சலித்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவும்.
அதன் பின்னர் மாவில் பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு போடவும். எல்லாவற்றையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கெட்டியாக பிசைந்த பிறகு, முறுக்கு உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்பவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரலில் வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் வட்டமாக எண்ணெய் முழுவதும் பிழியவும்.
ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் கழித்து எண்ணெய் அடங்கியதும் முறுக்கை எடுத்து விடவும்.
சத்தும் சுவையும் அடங்கிய கேழ்வரகு முறுக்கு தயார்.
கேழ்வரகு முறுக்கு செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்களுடய ராகி முருக்கு இன்று செய்தேன். மிகவும் நன்றக இருன்தது. மிக்க நன்றி

Thanks and Regards,
Chitra Devi

Thanks and Regards,
Chitra Devi