hi thalika

I think I removed that. I dont know how to remove correctly, but I did something.

Thanks for removing that even i go with Thalika words only.

ரொம்ப நன்றி சேங்கோ...ஆனா சாரி சேங்கோ செய்யமாட்டீங்கலோன்னு நெனச்சேன்...நல்ல பொண்ணு தான்.:-)

Its ok thalika, first I wrote that to admin through "Thodarbu" only but that was not working then only I wrote my comment here. Anyway I like your name very much...is there any meaning for that ??? bye...

Sang

Dear Sango,

உங்கள் பதிவை தாமதமாகத்தான் பார்த்தேன். பதில் அளிப்பதற்குள் நீங்கள் அதை நீக்கிவிட்டிருந்தீர்கள். அதை நீக்கியிருக்க தேவையில்லை என்ற போதிலும், யார் மனதும் புண்படக்கூடாது என்ற நல்ல நோக்கில் நீங்கள் நீக்கியிருப்பதற்கு எனது நன்றிகள். இதற்கு சற்று விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

திருமதி. செல்வி அவர்கள் என்னிடம் முன்பே இந்த டயட் சார்ட் பற்றி குறிப்பிட்டுவிட்டுதான் அதற்கான குறிப்புகளை இங்கே கொடுத்தார். அந்த சார்ட் அவருடைய சொந்த சார்ட் அல்ல என்றும் அவருக்கு ஒரு டயட்டீசியன் கொடுத்தது என்றும் அதனை தான் நீண்ட நாட்களாக கடைபிடித்து வருவதையும் தெரிவித்து இருந்தார். இதனை அவர் மன்றத்திலும் தெரிவித்துள்ளார். அந்த சார்ட்டில் கொடுக்கப்பட்டிருந்த உணவுகளுக்கான செய்முறை, இவரது சொந்த செய்முறை என்பதையும் தெரிவித்து இருந்தார். அந்த உணவுகளை தேவையான அளவு எண்ணெய், தேங்காய் என்று அளவான முறையில் பயன்படுத்தி அவர் எப்படி தயாரிக்கின்றாரோ அந்த செய்முறையில் கொடுத்து இருப்பதை குறிப்பிட்டு இருந்தார்.

நானும் நீங்கள் குறிப்பிட்ட அவள் விகடன் புத்தகத்தை படித்திருக்கவில்லை. அவரும் அதை படித்திருக்கவில்லை. ஆனால், சார்ட் அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு டயட்டீசியன் கொடுத்தது என்பது உண்மை. இதைக் குறிப்பிட்டுதான் அந்த சார்ட்டை எனக்கு அனுப்பி இருந்தார். அதனை படங்களுடன் கூடிய பக்கமாக தயார் செய்து, அவற்றை ஆரோக்கியம் பகுதியில் வெளியிட வேண்டும் என்பது எங்கள் திட்டம். அந்த பக்கத்தில் அவரது குறிப்புகளுக்கான லிங்க்ஸ் கொடுக்கவேண்டும் என்பதால் அவரை முன்னதாகவே குறிப்புகளை சேர்க்க சொல்லியிருந்தேன். இதில் நான் அந்த பக்கங்களை உடனடியாக வெளியிடாததால், இது ஏதோ அவரது சொந்த சார்ட் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. ஒருவேளை குறிப்புகள் வெளியானபோதே அந்த பக்கங்களும் வந்திருந்தால், அதில் விளக்கம் கொடுத்திருந்திருக்கலாம். இது என்னுடைய தவறுதான். அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கின்றேன்.

ஒரு ஊடகத்தில் வெளியான தகவல்களை அவர்களது அனுமதியின்றி கண்டிப்பாக வெளியிடக்கூடாது. இதில் மாற்றுக்கருத்து இல்லை. இங்கே திருமதி. செல்வி அவர்கள், அவருக்கு இந்த சார்ட்டினை கொடுத்தவர் அதை எங்கிருந்து கிடைக்கப்பெற்றார் என்பது தெரியாமலே, குறிப்புகளை மட்டும் தனது சொந்த குறிப்புகளாக கொடுத்துள்ளார். இந்த சார்ட் மட்டும் ஒன்று போல் இருந்து, குறிப்புகளின் செய்முறையில் மாற்றம் இருக்குமெனில் சார்ட் உதவி என்று அவள் விகடனுக்கு நன்றி தெரிவித்து நாம் அதனை வெளியிடலாம்.

அந்த புத்தகம் இணையத்தில் கிடைத்தால் அதற்கான லிங்க்கினை தயவுசெய்து எனக்கு அனுப்பி வையுங்கள். அப்படியில்லாத பட்சத்தில் உங்களால் இயன்றால் சில பக்கங்களை படங்கள் எடுத்து அனுப்பி வைக்கவும்.

Thank u for ur immediate reply first.

Sorry, I cant give u the link, because for that I have to give give my user ID and password for vikatan and moreover in that website only from 2004 books are available, but this book is 2003 January. I have that book with me.

The receipes, (seymuray)the ingredients are same in that so thats what I wrote about this.

Anyway I wrote that for our Arusuvai's goodwell only, because no one can take this as granted...

Sang

பேர் புடிச்சுதா?;-)இது என் கனவரின் குடும்ப பெயர்..சும்மா விளையாட்டுக்கு வெச்சேன்..ஆனா நல்லாருக்கு நிறைய பேர் சொன்னப்ரம் இது தான் என் பேர்னு மாத்திடலாமான்னு யோசிக்கிரேன்:-)..என் பேர் ருபி.
சரி சேங்கோ நீங்க தப்ப நினைக்க வேண்டாம்..அவங்கள்கே தெரியாம கொடுத்தது.என்கிட்டயும் சொல்லியிருக்காங்க டிஅயடீசியன் கொடுத்ததுன்னு ..அதான் அப்டி சொன்னேன்...சரி எப்படியோ இங்க பெயர்பதிவு பன்ன வெச்சாசுல்ல உங்கள..இனி அப்டியே மெல்ல தமிழில் எழுத வெச்சுடலாம்ல?:-)

மிகுந்த மன வருத்தத்துடன் இதை எழுதுகிறேன்.
பல சகோதரிகள் டயட்டுக்கான உணவுகள் என்ன சாப்பிடுவது என்று கேட்ட போது, பல வருடங்களாக நான் பின்பற்றும் இந்த சார்ட் மற்றவர்களுக்கும் பயன்படுமே என்று நினைத்தேன்.

இந்த சார்ட்டை என் அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த போது ஒரு டயட்டீசியன் எனக்கு கொடுத்தார்கள். ஒரு துண்டு பேப்பரில் பொடியாக எழுதி இருந்ததை நானாக காலம் பிரித்து எழுதிக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்கான குறிப்புகளை அவர்கள் எனக்கு தரவில்லை. அவர்கள் சொன்ன அட்வைஸ், எண்ணெய் குறைத்து, தேங்காய் இல்லாமல், கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்க வேண்டும், எல்லாவற்றையும் ஆவியில்தான் வேக வைக்க வேண்டும் என்பது.
நானாக அதன்படி எப்படியெல்லாம் தோன்றுகிறதோ, அதன்படி செய்வேன். அதில் எது சிறந்தாக நினைத்தேனோ அதை குறிப்புகளாக கொடுத்தேன். மற்றபடி அந்த சார்ட் எனக்கு கொடுத்த டயட்டீசியனுக்கு எப்படி கிடைத்தது என்றோ, அது எதில் வந்தது என்றோ எனக்கு தெரியாது.

அந்த சார்ட் என்னுடையது என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. நானும் நீண்ட நாட்களாக அவள் விகடன் வாசகிதான். அதில் நான் படித்திருந்தால் புத்தகத்தில் வந்தது என்றே சொல்லி இருப்பேன். டயட்டீசியன் கொடுத்த சார்ட் என்று சொல்லும் போது, புத்தகத்தில் வந்தது என்று சொல்ல மட்டும் நான் தயக்கப்படுவேனா?

மற்றபடி குறிப்புகள் ஒரே மாதிரி உள்ளனவா, பொருட்கள் ஒரே மாதிரி உள்ளனவா என்பது அந்த
குறிப்புகளை பார்க்காமல் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. ஒரு குறிப்பிட்ட குறிப்பில் பொருட்களும், செய்முறைகளும் சின்ன சின்ன வித்தியாசங்களுடன் மற்றபடி எல்லாமே ஒன்று
போலத்தான் இருக்கும். உதாரணமாக வடை என்று எடுத்துக் கொண்டால் தேவையான பொருட்கள்,
செய்முறை எல்லாமே ஒன்றாகத்தான் தெரியும், சின்ன சின்ன விஷயங்களைத்தவிர.

சமீபமாகக்கூட நான் கீமா மட்டர் குறிப்பு கொடுத்தபோது சகோதரி ஜலீலா அவர்கள் செய்யும் முறையும், நான் கொடுத்த குறிப்பும் ஒன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

எனக்கு எந்த குறிப்பையும் எதிலிருந்தும் எடுத்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கமோ அவசியமோ கிடையாது.

அதனால் எனக்கு எந்தவிதமான லாபமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்