மாபெரும் தலைக்கு பிறந்த நாள் வருது வருது வந்து கொண்டே இருக்குங்க :-)

ஹாய் என் செல்ல சகோதரிகளே,

வாங்க நாமெல்லாம் வாழ்த்த ஆர்ம்பிச்சுடலாம் இப்பவே, நம்மையெல்லாம் இங்க ஒன்னு சேர்த்த அந்த மேதையை(அண்ணா ஓவரா இருக்கா, என்ன பண்றது பிறந்த நாள் காணப்போறப்ப ரொம்ப ரொம்ப உயர்த்தி வாழ்த்தனுமே:-) இல்லைனாலும் நாங்க உயர்வா வாழ்த்தற அந்த உயரத்துல தான் இருக்கீங்க:-) என்ன அண்ணா கண்டுபிடிச்சிட்டேனா:-))

வாங்கப்பா, ஆரம்பிச்சுடலாம், இன்னைல இருந்தே வாழ்த்த ஆரம்பிச்சு, பிறந்த நாளன்னைக்கு பெரிய வாழ்த்தா போட்டுடலாம்:-)

அண்ணா,

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-) தங்கைகளுக்கு மற்றும் அக்காக்களுக்கு என்ன புது ட்ரீட் தரப்போறீங்க:-)

அறுசுவை தொடங்கிய நாளும் அது தான்ன்னு சொன்னீங்க இல்ல:-) புது அறுசுவை புத்தாண்டு அன்னைக்கு தொடங்கினீங்க சரியா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பாபுஜி ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......அண்ணா உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் ......

(என்னைக்கு ? ஹி ஹி ஹி ...நாள் தெரியாது...)

முதலில் உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறகு அறுசுவைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்து உங்களுக்கு திருமண நாள் வாழ்த்த காத்து கொண்டு இருக்கும் அறுசுவை குடும்பம். நீங்கள் இன்னும் பல சாதனைகள் பெற வாழ்த்துக்கள். மீதியை பிறகு வாழ்த்துகிறேன்.

ஜானகி

சகோதரிகள் ஹர்ஷினி, நர்த்தனா, ஜானகி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா இருக்கு.. :-) இன்னும் நாள் இருக்கு.

என்னோட பிறந்த தினத்தையெல்லாம் நான் கொண்டாடியது கிடையாது. அறுசுவைக்கும் அன்னைக்குதான் பிறந்த நாள்ங்கிறதால இந்த முறை ஒரு சின்ன விருந்தோட கொண்டாடலாம்னு ஒரு திட்டம். அறுசுவைக்கு மூன்று வயது முடிஞ்சு நான்கு தொடங்குகின்றது. அறுசுவையை நான்கு வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், முறையாக வெளியிட்டது 2004 நவம்பர் 18ல் தான்.

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சில வி.வி.ஐ.பி ஸ்ம் வர்றாங்க. நம்ம செல்வி அக்கா(& குடும்பத்தினர்), திருமதி. மனோ சாமிநாதன் இருவரும் நாகப்பட்டினம் அறுசுவை அலுவலகத்துக்கு (எங்க வீட்டுக்கு) வர்றாங்க. ஒவ்வொருவரையும் தனித்தனியா அழைக்க முடியல. இது திடீர் ப்ரொகிராம். அதனால ஒட்டுமொத்தமா இங்கே எல்லாருக்கும் அழைப்பு கொடுக்கிறேன்.

<font color="blue"> <b>"வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும், அறுசுவையின் நான்காவது பிறந்த தினவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்." </b></font>

மறக்காம வந்துடுங்க.. மனோ அத்தையும், செல்வி அக்காவும் விருந்து ரெடி பண்றதா சொல்லியிருக்காங்க. அவங்களைத் தவிர யாரும் சமைக்கலாமில் ஏராளமான, அருமையான குறிப்புகள் கொடுத்து வரும் திருமதி. சுமதி திருநாவுக்கரசு, திருமதி. பைரோஜா ஜமால், திருமதி. மங்கம்மா.. இன்னும் நிறைய பேர் வர இருக்காங்க. இந்தியாவில இருக்கிறவங்க தவறாம வந்து கலந்துக்கணும்.

அப்புறம் வரமுடியாத தூரத்துல, வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்காக, அன்னைக்கு நடக்கிற நிகழ்ச்சியை இங்கே மன்றத்துல உடனுக்குடன் போட்டோவோட கொடுக்கிறேன். பார்த்து புகை விடுங்க :-)

நாங்கள் வாழ்த்தின பிறகு எங்களுக்கு அழைப்பிதழ். அதற்கு முன்னாடி மூச்சு கூட விடவில்லை. விருது எல்லாம் எங்களுக்கு கண்டிப்பாக அனுப்புங்க. இந்த நான்கு வருடத்தில் அறுசுவை கண்டுள்ளது இனி வரும் வருடங்கள் அறுசுவை பல புதிய சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். எங்களை விருந்திற்கு அழைத்தற்கு மிகவும் நன்றி அண்ணா. நாங்கள் புகை விட்டால் தான் அங்கு அடுப்பு எரியும்.

ஜானகி

அறுசுவை தள அட்மினுக்கும்,அறுசுவை டாட் காமிர்க்கும் முன்னதாகவே எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

GOD IS GREAT
இனிய, பிறந்த நாள்வாழ்த்துக்கள் (அறுசுவை டாட் காமிற்க்கு )
பாபுவிற்கு,
பல்லாண்டு வாழ்க ! உங்கள் எண்ணங்களும், செயல்களும், வெற்றிபெற வாழ்த்தும்
பீவி,சிங்கப்பூர்

GOD IS GREAT

அன்புள்ள அண்ணா
உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மேலும் அறுசுவை விழா அழைப்பிர்க்கும் மிகுந்த சந்தோஷம்.வெளிநாட்டில் இருப்பதால் உறவினர்களே அழைக்க மறக்கும் போது உங்கள் அழைப்பு சந்தோஷத்தை கொடுத்தது.அறுசுவை எங்களுக்கெல்லாம் ஒரு சினேகிதியாக ஆஹிவிட்டது.நீங்கள் நடத்தும் அறுசுவை சிறப்புடனும் மேலும் மேலும் வளர உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

இப்பவே ஸ்டமக் பர்ன் ஆகுது.ஒரு ஒரு மாசம் பின்னால வரகூடாதா??நானும் குடும்பத்தோட வருவேனே???அட்லீஸ்ட் லைவ் டெலகாஸ்ட் பண்ணுங்க.இங்க இருந்தே பார்க்றோம்.இப்பவே வாழ்த்தவா?இதுக்குகூடவா கேக்கணும்.இல்ல அப்புறமா வர்றேன் வாழ்த்துறதுக்கு.

அட்மின் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :) அருசுவைக்கும் பிறந்த நாளா? பேஷ் பேஷ்! என்னால் 18 நவம்பர் வாழ்த்து சொல்ல முடியாது. I'll be in transit! அதனால் இப்போதே சொல்லிக்கொள்கிறேன். நீங்களும் நம் அறுசுவை தளமும் மென்மேலும் சிறந்து வாழ என் வாழ்த்துக்கள் :)

அன்புடன்
உமா

மேலும் சில பதிவுகள்