கோதுமை அப்பம்

தேதி: November 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ரவை - 1 டேபிள்ஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி
எண்ணெய்


 

கோதுமை மாவை நன்கு சலித்துக் கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை அதில் கரைத்துக் கொள்ளவும்.
அதில் கோதுமை மாவு, ரவை, மைதா, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து விட்டு, இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
* அப்பக் குழியிலும் செய்யலாம்.
* விரும்புபவர்கள் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தையும் நன்கு மசித்துக் கலந்து கொள்ளலாம். மிகுந்த மென்மையாக வரும்


மேலும் சில குறிப்புகள்


Comments

kaiyal karaipadhai vida mixiyilum oru otttu otti edukkalam.idli mavu padham enbadhu mukkiyam. nan ravaikku badhil oru pidi arisi mavu serppen. Idhaiyum oru murai try panni parkiren. Avani avittathirkku appam seyyam vendume.