உங்களின் கருத்துக்கள் தேவை

இங்கு என் வாழ்க்கை தோல்வி பற்றி ஒரு பதிவில் போட்டிருந்தேன். மீண்டும் சொல்லுகிறேன் அப்போழுது தான் உங்கள் கருத்து சொல்ல வசதியாக இருக்கும். என்க்கு திருமணம் ஆகி எழு வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் என் வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் அனுபவிக்க வில்லை. அவர் எனக்கு சொந்த மாமா பையன். அவர் எனக்காக ஒரு ரூபாய் கூட செலவளித்தது கிடையாது. ஆனாலும் ஒரு வருடம் மாமியார் வீட்டில் கழித்தேன். அப்போழுது மிகுந்த காய்ச்சலால் படுத்திருந்தேன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அப்பவே செத்து போய் விடலாம் போல இருந்த்து. ஆனால் மாமியார் வீட்டீலோ என் அம்மா வீட்டில் எதும் சொல்ல கூடாது என்று சொன்னார்கள். என் அம்மா வீடு அடுத்த தெரு தான் அதனால் நான் வேலைக்கு போகும் போது கூட வேவு பார்ப்பார்கள். அதனால் என் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஆனால் என் மன்தில் கஷ்டம் இருப்பது மட்டும் தெரியும் அதனால் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்
தற்செயலாக என் அப்பா காய்ச்சல் அடித்த அன்று வந்து இருந்தார். நான் ரொம்ப மெலிந்து காண்பட்டேன் அதனால் எங்கள் மாமியாரிடம் சொல்லி விட்டு கூட்டிக் கொண்டு போனார்கள். ஏனென்றால் ஏதோ ஜோசியம் பார்த்தர்கள் அந்த ஜோசியகாரன் நான் அந்த வீட்டில் இருந்தால் உங்கள் மகளை உயிரோடு பார்க்க முடியாது என்று சொல்லி விட்டான். என்னை அந்த நிலையில் பார்த்தவுடன் அது உறுதியாகி விட்டது. அதன் பிறகு எல்லவற்றையும் சொன்னேன். என் அப்பா தீர்க்கமாக சொல்லி விட்டார் மாப்பிள்ளை வந்து கூப்பிட்டால் ஒழிய அனுப்ப மாட்டேன் என்று. ஆனாலும் ஏதாவது பண்டிகை பொழுது போவேன் அப்பொழுது அவர் இருந்தால் கதவை என் மூஞ்சில் அடிப்பது போல் சாத்தி விட்டு செல்வார். திடீரென்று என்னிடம் சொல்லாமல் என் அப்பவிற்கு போன் பண்ணி இன்று ல்ண்டன் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போன் வைத்து விட்டார். என் கதை நீண்டு கொண்டே போகிறது அதனால் சுருக்கமாக சொல்கிறேன். என்னை கல்யாண்ம் பண்ணும் போது மிகவும் பணக் கஷ்டத்தில் இருந்தார்கள். நான் அப்போழுது ஒரு கம்பெனி நடத்தி கொண்டு இருந்தேன். எனக்கு நல்ல வருமானம். நான் எங்கள் வீட்டில் இருக்கும் போது கூட அவர்களுக்கு மாதா மாதம் என்னுடைய சம்பள்த்தை கொடுத்து கொண்டு வந்தேன். இந்த பிரச்சினையால் என்னால் கம்பெனியை சரி வர பார்க்க முடியாம்ல் நஷ்டம் ஆகி விட்டது. அதன் பிறகு வீட்டிற்குள்ளே அடந்து கிடதேன். நாங்கள் கம்பெனியை 3 பேர் சேர்ந்து நடத்தி வந்தோம். மற்ற ரெண்டு பேரும் ஆண்கள். அதில் ஒருவர் வீட்டில் தான் இப்பொழுது தங்கி இருக்கிறேன். சில மாதம் ஆஸ்பிட்டலில் இருந்தேன். அதன் பிறகு அந்த பிரெண்டு தான் என்னை தேற்றி அவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு அங்கு என்னை சேர்த்து விட்டார். அதன் பிறகும் என்னால் முடியவில்லை எல்லோரும் கல்யாண வாழ்க்கை பற்றியே கேட்டுக் கொன்டு இருந்தார்கள். அப்படியே ஏழு வருடம் ஓட்டினேன். பிறகு என் பிரெண்டு ஆஸ்திரேலியா வந்து விட்டார். அத்ன் பிறகு எனக்கு Pற் ட்ரை பண்ணார். நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்னுடைய பாஸ்போர்டில் என்னுடைய கணவர் பெயரை வைத்து எடுத்து விட்டேன். அதனால் அவருடைய பாஸ்ப்பொர்ட் காப்பி கேட்டார்கள் ஆனால் தரோம் என்று மூன்று மாதம் ஒட்டினார்கள் கடைசி வரைக்கும் தரவில்லை அதனால் விசா கான்சல் ஆகி விட்டது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து போய்விட்டது. என்னுடைய பிரெண்டு தான் எனக்கு பக்க பலமாக இருந்தார். அவர் தான் இங்கு என்னை கூட்டிக் கொண்டு வந்தார். என் முயற்சியில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வருடத்திற்கு முன்பு வீடு கட்டினேன். எங்கள் அப்பா பிஸ்னஸ் தான் செய்து கொண்டு இருந்தார்கள். அதில் நஷ்டமாகி விட்டது ஆனால் எப்படியோ எங்களை படிக்க வைத்தார். அதனால் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த வீட்டை கட்டிக் கொடுத்தேன். நங்கள் கூட்டுக் குடும்பமாக தான் இருக்கிறோம். என்னுடைய அப்பாவின் தம்பியும் நாங்களும். நான் காலேஜ் படிக்கும் வரை இரண்டு ரூமில் தான் எருந்தோம். இப்பொழுது 2 தளம் கொண்ட வீடு கட்டிக் கொடுத்து இருக்கிறேன். அதன் கடனை தான் அடைத்து கொண்டு இருக்கிறேன்.
என் தங்கை கடந்த வருடம் ஒரு மெயில் அனுப்பினால் என் கணவருக்கு நீங்கள் போய் அங்கு ஜாலியாக் லண்டன்ல் இருக்கிறீர்கள் எங்க அக்காவிற்கு ஒரு பதில் சொல்லுங்கள். இல்லை வேண்டாம் என்றால் டைவர்ஸ் கொடுங்கள். அதற்கு பதில் நீங்கள் பேப்ர்ஸ் அனுப்பினால் கையெழுத்து போட்டு தருகிறேன். அந்த மெயில் எடுத்து கொண்டு மாமியார் வீட்டிற்கு போனோம். அவர்கள் சண்டைக்கு வந்தார்கள் அது எப்படி ஒரு சின்ன பொன்னு அப்படி எழுதலாம் அதனால் தான் கோபத்தில் அப்படி பதில் அனுப்பி விட்டான். நான் பொறுமையாக இருக்க வேண்டும் அவர் திருந்தி வரும் வரை ஆனால் எப்பொழுது என்று சொல்ல முடியாது அது வரை நான் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு இந்த ஜூன்ல் தான் டைவர்ஸ் வாங்கினேன்.
இப்பொழுது பாய்ன்ட்க்கு வருகிறேன். எங்கள் வீட்டில், தங்கை மற்றும் என்னை மறுமண்ம் செயா சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனக்கு இங்கு தனிமையாக இருக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது ஆனால் ம்றுமணமும் பயமாக தான் இருக்கிறது. என் கதை ரொம்ப கொடுமையான் கதை. எஅனக்கு அறுசுவை சகோதிரிகள் நல்ல கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

என்னைப்பொறுத்த வரையில் தகுந்த ஆண் (அதாவது உங்கள் பழைய வாழ்க்கையைக் கிளறாத) கிடைத்தால் தாராளமாக மறுமணம் செய்து கொள்ளலாம். டைவர்ஸோ ஆகிவிட்டது. அப்புறம் என்ன.

உங்களுக்கு நல்ல ஒரு துணை கிடைக்க மனமார இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்பு ஜானகி
வழ்க்கையில் மறுமண்ம் என்பது நினைத்து பார்க்கமுடியாத ஒன்று.
சரி உங்கள் வாழ்க்கையில் அது வந்து விட்டது,
முதலில் அப்படி ஆகிவிட்டது என்று பயப்படுகிறீர்கள்.
கடவுள நல்ல வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கூட பழகுபவர்களில் உங்களை பற்றி நல்ல அறிந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் நான் சொலவது சரியா தப்பா தெரியவில்லை.மனதை போட்டு குழப்பவேண்டாம், உங்களுக்கு என்று என்ன நடக்க இருக்கிறதோ அது நடக்கும். பாகற்காயா கசந்து இருக்கும் உங்கள் வாழ்க்கை சக்கரை பொங்கலாக கூடிய வரைவில் இனிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜானகி,
இதை ரொம்ப யோசித்து தான் எழுதுகிறேன்.
ரொம்ப ரொம்ப சென்சிட்டிவான விஷயம் இது. என்ன தான் அம்மா,அப்பா, தங்கை, அண்ணா என்ற சுற்றம் இருந்தாலும் கணவன்/மனைவி என்பது மிகவும் நெருக்கமான உறவாக கருதப்படுகிறது.

திருமணம் என்பதே ஒரு சிறந்த அரசியல் களம் மற்றும் நாடக மேடை . அதில் சிரித்தால் நாம் சிரிக்கவும் அழுதால் அழவும் தெரியவேண்டும். நம்முடைய ஒரிஜினாலிட்டியை இழந்து டூப்ளிகேட்டாகி விடுவோம். (55,56 வயதில் ஆர்டர் பண்ணினால் என்ன ?சந்தோஷ்மாக இருந்தால் என்ன? அதற்கு முன்னால்??) ஒரு சிலருக்கு இப்படி வாழ்க்கை அமைந்து விடுகிறது.

எங்கள் வீட்டு பக்கத்தில் இப்படித்தான் சொந்த அத்தை பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். என்ன செய்ய பிறந்த குழந்தையும் இறந்து பிறக்க ஒரே பிரச்சினை. அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு தொடர்பு இருப்பதாக அறிந்தவுடன் 'டைவர்ஸ்' கொடுத்து விட்டார்கள். அவன் அந்த பெண்ணை அடுத்தவாரமே திருமணம் செய்து இப்போது ஒரு 'ட்வின்ஸ்' குழந்தைகள் உள்ளன.

இவளுக்கும் வரன் தேடினார்கள் 5 வருடத்திற்குப் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது. ஆனால் மாப்பிள்ளைக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை. ஆனால் இந்த பெண் மிகவும் நல்லவள் என்பதால் அக்குழந்தையை தன் குழந்தையாக எண்ணி வளர்க்கிறாள். இவளோ படிக்காதவள் இந்த கணவரோ டபுள் டாக்டரேட் (லண்டனில் உள்ளார்படித்துக் கொண்டு) இந்த வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றாள். மேலும் இவளும் டிகிரி படித்து வருகிறாள்.லண்டனுக்கு விரைவில் குழந்தையும், இவளும் செல்கிறார்கள்.

எனவே டியர் ஜானகி ஒரு நிம்மதியான துணையை தேடி பல்லாண்டு வாழ என் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.

ஹலோ ஜானகி எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தையும்,பல கசப்பான சம்பவங்களையும் படிக்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கு முன்பாக உங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று கேட்க்கின்றேன். தங்களின் மாமாவின் குடும்பத்தாருக்கும், தங்களின் மாமா அதாவது தங்களின் முன்நாளைய கணவருக்கும், ஏன் உங்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கண்டு பிடித்தீர்களா? மேலும் நீங்கள் மறுமணம் செய்துக் கொள்ள ஏன் பயப்படுகின்றீர்கள்? என்ற இரண்டு விசயத்தை கூறினீர்களானால் எனது கருத்தையும் கூறுவேன்.

ஜெயந்தி மேடம், ஜலீலா, சுபா, மனோகிரி உங்கள் ஆலோசனைகளுக்கு ரொம்ப நன்றி.

மனோகிரி மேடம் என்ன காரணம் என்றே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாரை பார்த்தாலும் ஒழிந்து போய் விடுவார். நான் எவ்வளவோ முயன்றும் பயனில்லை. இராத்திரி நான் தூங்கின பிறகு தான் வருவார். நான் ஆபிஸ் சென்ற பிறகு விழிப்பார். நான் ஒரு தடவை எப்படியாவது இன்று கேட்டு விடனும் என்று எண்ணி அன்று பேசினேன் அவர் அந்த அறையிலிருந்து போய் ஹாலில் படுத்து கொண்டார். எனக்கு ரொம்ப அவமானமாக போய்விட்டது ஏனென்றால் அவர்களும் கூட்டு குடும்பம் 4 மச்சனர்கள் அதன் பின்பு எனக்கு அவர்களை பார்க்கவே கூச்சமாக இருந்தது. அதனால் யாருக்கும் காரணம் தெரியாது.
மறுமணம் பயம் என்று சொல்வதற்கு காரணம் என்னால் இனி மேல் எந்த கஷ்டத்தையும் தாங்கும் சக்தி என் மன்திற்கோ, உடலிற்கோ இல்லை.

ஜானகி

டியர் ஜானகி பதில் எழுதியதற்கு நன்றி.உங்களிடம் இரண்டு விசயத்திற்கு விளக்கம் கேட்டதற்கு காரணம் சாதாரணமாக தோல்வியில்முடியும் திருமணங்களில் பொதுவாக இருவர் மீதும் குற்றம் இருக்கும்படியாக இருக்கும் அல்லது யாராவது ஒருவராவது அதற்கு காரணமாக இருப்பர், இது தெரிந்துக் கொண்டு அதன்படி எனது கருத்தை கூறலாம் என்று தான் கேட்டேன்.
உங்கள் விளக்கத்தைப் பார்த்தபோது நிச்சயமாக உங்களிடத்தில் ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை, ஆகவே உங்களுக்கு மறு மணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று தான் கூறுவேன்.
முந்தைய திருமணத்தின் முறிவுக்கு காரணம் நீங்கள் இல்லை என்று தெளிவாக தெரியும் பொழுது இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சொந்த உறவுக்கார பெண்ணையே வைத்து குடும்பம் நடத்தத் தெரியாத உறவை நினைத்து அவர்களுக்காக வருத்தமடலாமே ஒழிய, உங்கள் வாழ்க்கையை மேலும் வீணாக்குவதில் ஒரு அர்த்தமுமில்லை, ஏற்க்கெனவே ஏழு பொன்னான வருடங்களைப் வீணாக்கிட்டீர்களே என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. ஆகவே மறுமணத்தால் வரும் பிரச்சனையை தாங்கும் சக்தி கிடையாது என்று மேலும் காலத்தை வீணாக்க வேண்டாம்.

சேர்ந்து வாழும் எல்லா தம்பதியரிடமும் ஏதாவதொரு குறை இருக்கத் தான் செய்யும், அவையெல்லாம் இல்லற வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்புதான் நீடித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுதரும்.ஆகவே என்னைப்பொருத்தவரையில் நீங்கள் இதில் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் ஜாலியாக மறுமணத்திற்கு தயார் ஆகுங்கள் சரியா.

இந்த சந்தோசத்தில் எங்களுக்கு அழைப்பிதழை அனுப்ப மறந்துடாதீங்க.கூடிய விரைவில் மனதுக்கேற்ற மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

உங்கள் பதிவை படித்தவுடன் மனம் லேசானது போல் உணர்வு. அப்படி மறுமணம் நடந்தால் உங்களை எல்லாம் அழைக்காமல் கனவில் கூட நடக்காது. எனக்கு இந்தியாவில் இருக்கும் வரை தனிமை தெரியவில்லை ஆனால் இங்கு வந்த பிறகு ரொம்ப தனிமையாக உண்ர்கிறேன். அதனால் தான் பதிவை போட்டேன். இவ்வளவு நடந்த பிறகும் நான் மாமியார் வீட்டில் எல்லோரிடமும் பேசுவேன். இப்பொழுது கூட ஒரு மச்சனருக்கு கல்யாண்ம் நட்ந்த்து போன் பண்ணி வாழ்த்து கூறினேன். என்னை பொறுத்த வரை யாரிடமும் கோபம் காட்டுவதில் அர்த்தமில்லை.
உங்கள் ஆலோசனையை அடிக்கடி கூறுங்கள்.

ஜானகி

அன்புள்ள ஜானகி!

உங்கள் அனுபவங்கள் மிகவும் வருத்தத்தைத் தந்தது. இத்தனை நடந்த பின்னரும் மறுபடியும் புகுந்த வீட்டில் அனைவரையும் தொடர்பு கொண்டு பேசும் நல்ல மனம் உங்களுக்கு இருக்கிறது. மனம் மிகவும் நல்லதாக இருந்தால் அடுத்தவரிடம் இருக்கும் தீமைகளை அதிகம் உணரத் தெரியாது. யார் மீதும் உங்களுக்குப் பிரியம் ஏற்பட்டாலும் அவரின் அடுத்த பக்கம் எப்படி என்பது புரிய பல நாட்களாகும். அதனால் தீர ஆலோசனை செய்து மறுமணம் புரியுங்கள்.

ஒஹ் ஜானகி உங்கள் கதை ஐ கேட்டு கண் கலங்கிடேன்...படத்தில்தான் பார்த்து இருகேன்..நிஜத்திலும் இப்படி மனுஷங்க இருக்காங்கன்னு இப்பத்தான் தெரித்து கொண்டேன்..மருமணம் என்பது எந்த பொன்னுக்குமே கஸ்டமான ஒன்ருத்தான்...ஆனால் இப்ப்டிபட்ட்வருக்காக நீங்கள் ஏன் உன்கள் வாழ்க்கை ஐ வீணடிக்க வேன்டும்?எங்கள் அனைவரின் பிராத்தனையும் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு...உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே ந்டக்கும்...கவலை படாதீர்கள்...உங்களை புரித்து நடக்கஊடிய கணவரை தேர்த்து எடுத்து மணவாழ்க்கை ஐ தொடங்குங்கள்..ஆனால் முடிவு எடுக்கும் போது நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள்...நல்ல வாழ்த்கைத்துனை அமைய என் வாழ்த்துக்கள்அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்