இனிப்பு தக்காளி

தேதி: November 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஆப்பிள் தக்காளி - 5
சர்க்கரை - அரை கப்
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 2
முந்திரி - 10
சீட்லஸ் திராட்சைப்பழம் - 15
ஆப்பிள் - பாதி பழம்


 

தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய் தாளித்து மசித்த தக்காளியை போட்டு வதக்கவும். அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
தக்காளியில் பச்சை வாசனை போனதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஓரளவு திக் ஆனதும் இறக்கவும்.
இந்த கூழ் ஆறியதும் நெய்யில் வறுத்த முந்திரி, நறுக்கிய ஆப்பிள், திராட்சை சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்