பாகற்காய் க்ரிஸ்பி ஃப்ரை

தேதி: November 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பாகற்காய் - கால் கிலோ
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
அரிசி மாவு - அரை கப்
சோள மாவு - அரை கப்
உப்பு, பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு


 

பாகற்காயை மெல்லிதாக வட்ட வட்டமாக நறுக்கவும். பாகற்காயை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பாதி வெந்ததும் தண்ணீரை ஒட்ட வடிகட்டி வைக்கவும். வெந்த பாகற்காயில் மிளகாய்தூள், மல்லிதூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.
சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு அரிசிமாவு, சோளமாவு சேர்த்து பாகற்காயில் பிசறி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த பாகற்காய் ஃப்ரை செய்தேன்
நல்லா மொறு மொறுன்னு இருந்தது நன்றிகளும் வாழ்த்துக்களும்..

வாழு, வாழவிடு..

ஹாய் மாலதி சிஷ்டர், பாவக்காய் க்ரிஷ்பி ப்ரை மிகவும் நன்றாக இருந்தது. என் கணவர் விரும்பி சாப்பிட்டார். குறிப்புக்கு வாழ்த்துக்கள். அன்புடன் ந.வானதி