தேதி: November 26, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வறுத்த நிலக்கடலை - ஒரு கப்
கடலை மாவு - கால் கப்
மைதா - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 6 இலை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
நிலக்கடலையையும், எண்ணெயையும் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து தோசை மாவு போல கரைத்து வைத்து அதில் நிலக்கடலையை போட்டு கலக்கவும்.
எண்ணெயை காய விட்டு காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்த நிலக்கடலையை கையால் தனித்தனியே உதிரியாக வரும்படி பொரிக்கவும்.
நிமிடத்தில் சுவையாக தயாராகக்கூடிய ஸ்பைசி பீநட் ரெடி.
Comments
சந்தேகம்
தளிகா இதற்கு வறுத்த வேர்கடலையா உபயோகிக்கவேண்டும்? நார்மலாக வறுக்காத வேர்கடலையில்தானே செய்வோம்.
தளிகாஆஆஆஆ...
தளிகா இரண்டாவது தரம்
வானதி ஏலம்
வானதி ஏலம் விட்டுராதீஇங்காஆ....பாக்கல இதை..வறுக்காமல் தான் செய்வாங்க...நான் வறுத்ததில் செய்வேன் அப்ப வெளிய மாவு மட்டும் வறுபட்டா போதும் இல்லாட்டி கொஞ்ச டைம் எடுக்கும் கடலையும் வேக .வானதி இதிலேயே நான் அரிசி மாவு 3 ஸ்பூனும் மைதா 5 ஸ்பூனும் மட்டும் போட்டு பூன்டு,கரிவேப்பிலை போட்டு செய்வேன் அது இன்னும் எனக்கு புடிக்கும்..ஆனால் பொதுவாக இப்படி மசாலா கடலையில் இதுவெல்லாம் சேர்ப்பார்கள்.
நல்ல ஐடியா
தளிகா இது நல்ல ஐடியாவா இருக்கு. செய்து பார்த்துட்டு சொல்றேன்.
ஸ்பைசி பீனட்
தளிகா ஸ்பைசி பீனட் சூப்பராக இருந்தது. க.வேப்பிலை, பூண்டு சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருந்தது. விபாவிற்கு இதுவும் மிகவும் பிடித்து விட்டது. மிகவும் நன்றி.
ஸ்பைசி பீனட்
அய்யோ வானதி எனக்கு சந்தோஷமா இருக்கு..விபாவுக்கு புடிச்சது தான் சந்தோஷம்..ஏன்னு சொல்லுங்க பிள்ளைகளுக்கு தான் எதுவும் இறங்காது தப்பி தவறி இஷ்டப்பட்டுட்டாங்கன்னு வை அது போல் வெற்றி ஏதுமில்லை..தேன்க்ஸ் விபா..அடுத்தது ஸ்பெஷல் பக்கோடா செய்து பாருங்கள்