கோஸ் பக்கோடா

தேதி: November 27, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோஸ் துருவல் - 2கப்,
அரிசி மாவு - 1 கைப்பிடி,
கடலை மாவு - 2கைப்பிடி,
பச்சை மிளகாய் - 4,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் எல்லா மாவு, கோஸ் துருவல் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு (கெட்டியாக) பதத்திற்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை எண்ணெயில் உதிர்த்து விடவும். சிவக்க விட்டு எடுக்கவும்.


சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும், மாலை டிபனுக்கும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர்மா,இதன் சுவையை சொல்ல வார்த்தையில்லை.ஹஸ் வைக்காம நானே எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டேன்.எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.இனி அடிக்கடி கோஸ் பக்கோடா தான் எங்க வீட்ல,உங்க பேரை சொல்லி சாப்பிடு[வேன்]வோம்.

அன்பு மேனகா,
இது ரொம்ப அநியாயம், அடுத்த முறையாவது நிறைய செய்து அவருக்கும் கொஞ்சம் மிச்சம் வை, முடிஞ்சா :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.