பால் கொழுக்கட்டை

தேதி: November 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் -- 1 கப்
பச்சரிசி மாவு -- 1 கப், 3 ஸ்பூன்
சர்க்கரை -- 1/2 கப்
தேங்காய் துருவல் -- 3 டீஸ்பூன்
ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)


 

பச்சரிசி மாவை உப்பு, சுடு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிய உருண்டையாகவும், சிறிய கொழுக்கட்டையாகவும் பிடிக்கவும்.
அதை இட்லி பானையில் முக்கால் வேக்காட்டில் வேகவைக்கவும்.
வேறு பாத்திரத்தில் பாலை காய்ச்சி வைக்கவும்.
வேறு ஒரு அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் (குக்கர் ஃபேன்) தண்ணீர் வைத்து கொதிக்கும் சமயத்தில் வேகவைத்த கொழுக்கட்டையை அதில் போடவும்.
ஒரு நிமிடம் கழித்து 3 ஸ்பூன் பச்சரிசியை தண்ணீர் விட்டு நன்கு கரைக்கவும்.
அதை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டி யில்லாமல் கலக்கவும்.
ஒரு கொதி வந்ததும் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து ஒரு கலக்கு கலக்கி பின் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் கலக்கி அடுப்பை அணைக்கவும்.
இதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
பால் கொழுக்கட்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்