கோன் பலகாரம்

தேதி: November 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

இலங்கைத் தமிழரான <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a> அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க
ஃபில்லிங்
காரம் : ஏதாவது பிடித்த கறி. பொதுவாக உருளைக்கிழங்கு/சோயா உருண்டை/வடகறி etc.
இனிப்பு:
ரவை - 1 கப்
பால் - 1 கப்
சீனி - 1/2கப்
கஜு(முந்திரி) - 20
ரெய்சின்/பேரீச்சம்பழம் - 20
மஞ்சள் நிறம் - சிறிது
பட்டர்/நெய் - 4 மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை சரியான அளவுகளில் தனியாக எடுத்து வைக்கவும்.
மாவுடன் பட்டர், உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும்.
பின்னர் அதனை சப்பாத்திக்கு தட்டுவதுபோல மெலிதாக நீளமாக தட்டி, கத்தியால் ஒரு அங்குல அகலத்திற்கு நீள ரிப்பன்களாக வெட்டவும்.
பின்னர் இந்த ரிப்பன்களை கோன் அச்சின் அடியிலிருந்து (கூரான நுனியிலிருந்து) மேல்பாகம் வரை சுற்றவும். இது ஐஸ்கிரீம் கோன் போல வரும்.
பின்னர் கொதிக்கும் எண்ணெய்யில் அப்படியே போட்டு சிவக்க பொரிக்கவும். பொரிக்கும் போது கோன் அச்சு தனியே கழன்று வரும். இதில் மீண்டும் மாவை வைத்து சுற்றலாம்.
இவ்வாறு எல்லா மாவையும் கோன்களாக சுட்டு எடுக்கவும்.
காரம்: இந்த கோன்களினுள்ளே விரும்பிய கார ஃபில்லிங்கை வைத்து நிரப்பி கார சட்னி, கெட்சப் உடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
இனிப்பிற்கு : முதலில் ரவையை வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
பாலினுள் கஜு, வெட்டிய பேரீச்சம்பழம் அல்லது ரெய்சின், மஞ்சள் நிறம் சேர்த்து காய்ச்சவும்.
பால் கொதித்ததும் அதனுள் ரவையை போட்டு கிளறவும்.
ரவை வெந்ததும் அதனுள் சீனி, பட்டரை சேர்த்து கைவிடாது அல்வா பதத்திற்கு கிண்டி இறக்கவும்.
பின்னர் இதனை பொரித்த கோன்களில் வைத்து நிரப்பவும். இப்போது சுவையான இனிப்பு கோன் பலகாரம் தயார்.

கோன் அச்சு இல்லாவிட்டால் பெரிய அளவிலான பப்பா குழலை 4 - 5 அங்குல துண்டுகளாக வெட்டி அதிலும் மாவை சுற்றலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முன்படத்தை பார்த்தப்பவே நர்மதான்னு தெரிஞ்சது...அவ்வளவு அழகா இருக்கு நர்மதா...எதையும் அழகா விளக்கமா செய்யரிங்க...
அது என்ன பப்பா குழல்?

தளிகா:-)

ஆஹ்!! நர்மதா என்னப்பா இது. சும்மா தாக்கிட்டீங்க :-) என்ன அழகா இருக்கு!! ஆமா இந்த மாதிரி ரெசிபி எல்லாம் உங்க கற்பனைல வர்றதா? எனக்கு புதுசா ஏதாவது பண்ணுனா ஒண்ணூமே தோணாது.. கடவுள் கொட்த்த வரம் போலிருக்கு உங்க கை-கலைகள்: சமையலா இருக்கட்டும் இல்ல கைவின்யா இருக்கட்டும்!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அந்த கோன் அச்சு எங்க வாங்கினீங்க நர்மதா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அன்பின் தளிகா, ஹேமா, பாராட்டுக்கு மிக்க நன்றி. இது இம்முறை தீபாவளிக்கு செய்தது. :)

தளிகா, பப்பா குழல் என்பது பப்பாளி இலையின் பின்னால் நீண்ட குழல் போல இருக்குமே அதுதான். நன்கு முற்றிய இலையாயின் குழலின் அளவும் பெரிதாக இருக்கும். அதில் செய்வதும் சுலபம்.

ஹேமா, அந்த அச்சு இலங்கையில் வாங்கியது. சென்ற வருடம் சென்றபோது வாங்கி வந்தேன். சமைக்கிறது பெரிய வேலையெல்லாம் இல்லை. சாததினுள் தக்காளி போட்டா தக்காளி சாதம், கொத்தமல்லி போட்டா கொத்தமல்லி சாதம். இப்பிடி இன்கிரீடியன்ஸ மாத்தி மாத்தி போட்டா வித்தியாசமான புது புது ரெசிபீஸ் கிடைக்கும் :)
-நர்மதா :)

நர்மதா சமையலுக்கு presentation மிகவும் முக்கியம். உங்கள் cones பார்த்தாலே ஜொள்ளு வருகிறது.party யில் அசத்த சரியான dish.

நர்மதா அந்த கோன் அச்சு இலங்கையில் எந்த கடையில் வாங்கினீர்கள்? தயவு செய்து சொல்ல முடியுமா? எனது அம்மாவும் பப்ப குழலில் இதனை அழககா செய்வர்கள். அம்மா உருளைக்கிழங்குடன் மட்டன் or சிக்கன் சேர்த்து கறி செய்து கோனுள் வைப்பார்கள். நன்றாக இருக்கும்.

vani.muralee

பாராட்டுக்கு நன்றி கவிதா & சாத்வி.
சாத்வி, இந்த அச்சு யாழ்பாணத்தில் வாங்கியது. யாழ் நகரில் அண்ணா கோப்பி கடைக்கு அரிகில் உள்ள ஒரு கடையில் வாளி, கயிறு போன்ற பொருட்கள் விற்பார்கள். அதே கடையில் குக்கீஸ் (தோட்டு பலகார)அச்சுக்களும் இந்த அச்சுக்களும் வாங்கினேன். கொழும்பிலும் முதலாம் இரண்டாம் குறுக்கு தெருக்களில் உள்ள பாத்திர கடைகளில் கிடைக்கும் என நினைக்கிறேன்.
-நர்மதா:)

வணக்கம் நர்மதா.இந்த கோன்பலகாரத்தை பார்த்தவுடன் அம்மா ஞாபகம் வந்துவிட்டது,நீங்கள் வசிப்பது கனடாவிலா? அப்படி என்றால் இங்கு எங்கு கோன் அச்சு வாங்கமுடியுமென்று தயவுசெய்து கூறமுடியுமா? நன்றி.

THuSHI

அன்பின் லக்க்ஷனா,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அச்சு இலங்கையில் வாங்கினேன். நான் வசிப்பது யு.எஸ்ஸில். கனடாவில் எங்கு வாங்கலாம் என தெரியவில்லை. ஏதாவது இலங்கை கடைகளில் கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
-நர்மதா:)

அன்பு நர்மதா. உங்களுடய கோன் டிஷ் பாக்கவே ரொம்ப நல்ல இருக்கு. Its tempting me so much..நான் இப்போது US இல் இருக்கிறேன். இந்த அச்சு எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. உங்கலுக்கு தெரிந்தால் சொல்லவும்.

Thanks