பைன் கோன்கள் கொண்டு கொக்குகள் செய்வது எப்படி?

தேதி: November 29, 2007

5
Average: 4.4 (7 votes)

 

பைன் கோன்கள் - 2 பெரிது, 2 சிறிது
மரக்குச்சிகள்
வெள்ளை கிளே
பிரவுண் பெயின்ட்
கறுப்பு பெயின்ட்
பச்சை பெயின்ட்
தூரிகை
தெர்மொகோல் - சிறிய துண்டு
பச்சை நிற ஃபெல்ட்
கோந்து/ஹாட் க்ளூ

 

மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் மரக்குச்சிகளை 5 - 6 அங்குல துண்டுகளாக 6 துண்டுகள் வெட்டி பிரவுண் நிற வர்ணம் தீட்டி காய வைக்கவும்
பின்னர் அதே அளவு மரக்குச்சிகளில் 1 அங்குல துண்டுகள் 2 வெட்டி முனைகளை கூராக சீவவும். (சொண்டு/வாய் பகுதிக்காக)
கிளேயினை சிறிய நெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி ஒரு 6 அங்குல குச்சியின் முனையில் வைத்து அழுத்தமாக இணைத்து கிளேயின் மறு முனையில் ஒரு அங்குல கூராக்கிய குச்சியை வைத்து இணைத்து தலை போல வடிவம் கொண்டு வரவும்.
பேக் பண்ணும் கிளேயாயின் பேக் செய்து அல்லது காய வைத்து தலையின் இரு பக்கமும் கறுப்பு பெயிண்ட்டால் கண்களை வரையவும்.
பின்னர் பெரிய பைன் கோன் ஒன்றை எடுத்து அதன் கீழ் புறத்தில் இரு 6 அங்குல துண்டு குச்சிகளை வைத்து ஒட்டவும் (கால்கள்). அதன் பின்னர் தலைப்பகுதியை பைன் கோனின் மேல் பக்கத்தில் ஒரு அந்தத்தில் வைத்து ஒட்டி காய விடவும். இவ்வாறு 2 கொக்குகள் செய்யவும்.
சிறிய பைன் கோனிற்கு பச்சை வர்ணம் தீட்டவும்.
தெர்மாகோலினைச்சுற்றி பச்சை ஃபெல்ட்டினை வைத்து ஒட்டி சிறிய மேடை போன்று செய்து கொள்ளவும்.
அதன் மேல் பச்சை வர்ணம் தீட்டிய சிறிய பைன் கோன்களை இடைவெளி விட்டு வைத்து ஒட்டவும். பார்ப்பதற்கு சிறிய புதர் போன்று தோற்றமளிக்கும்.
இறுதியாக கொக்குகளை தெர்மாகோலில் சொருகி விடவும்.
இவ்வாறு பிடித்த எண்ணிக்கையில் கொக்குகள் செய்து பிடித்தவாறு தெர்மாகோலில் சொருகி அழகுபடுத்தலாம். இந்த அழகிய கொக்கு பொம்மையை செய்து காட்டியவர் திருமதி. நர்மதா அவர்கள். இவர் அறுசுவையில் ஏராளமான சமையல் குறிப்புகளும், கைவினைப் பொருட்கள் செய்முறைகளும் கொடுத்து வருகின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா அருமையா இருக்கு...அவ்வளவு அழகா இருக்கு..அதும் அந்த நீல பேக்ரவுன்ட் (ஃபோடோஷாப்பா இருந்தாலும்:-))பாக்க அவ்வளவு அழகா இருக்கு இதுக்கு

தளிகா:-)

அன்பின் தளிகா, பாராட்டுக்கு மிக்க நன்றி. அந்த நீல பேக்ரவுண்ட் நான் போடவில்லை. அது அட்மின் செய்தது. நான் சாதாரணமாகதான் அனுப்பினேன். அதை எடிட் செய்து அழகாக்கியது அட்மின்தான். இப்ப பார்க்க தெளிவா அழகா இருக்கு. :)
-நர்மதா :)

ரொம்ப ஆழகா இருக்கு
ஊங்கள் creativity-க்கு வானமே எல்லை

really suberb ur creativity suber give me more.

உங்களுடைய வேலைபாடு மிகவும் அழகாக இருக்கிறது. எல்லாவற்றிலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும். எங்களுகாக செய்து காட்டியதற்கு நன்றி.

ஜானகி

டியர் நர்மதா,
வாழ்த்துக்கள்!உங்கள் கைவேலை மற்றும் சமையல் இரண்டுமே ப்ரமாதம்.கைவேலையும் சரி சமையலும் சரி இப்படி கலக்கலா பண்ண பயிற்சி எடுத்துகிட்டீங்களா இல்ல own interestaa? .சீக்கிரமே கூட்டாஞ்சோறுவில் double century அடிக்க அட்வான்ஸ் congrats!

அன்பின் நர்மதா உங்களுடைய ஒவ்வொரு செய்முறைகளும்(சமையல்குறிப்புகள்,கைவினைப்பொருட்கள்) மிகவும் எளிமையானதாக இருக்கின்றது. கைவினைப்பொருட்கள் மிகவும் கற்பனைத்திறன் வாய்ந்ததாக இருக்கின்றது. தொடர்ந்தும் நிறைய தங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். தலைப்பில் கூறியபடி தங்களிற்கு பாராட்டவார்த்தைகளில்லை. நன்றி. அன்புடன் அம்முலு

அன்பு நர்மதா
எப்படி இருக்கீங்க இன்று அருசுவையை நீங்கள் தான் ஆக்கிரமித்துள்ளீர்கள் இன்றைய ஸ்பெஷலில் கோன் பலகாரம் ஒரு அழகென்றால் கொக்கு படம் அழகோ அழகு!உங்களிடம் நிறைய திறமைகள்!உங்களை பார்த்து வியப்படைகிறேன்!எனது மனமுவந்த பாராட்டுக்கள்!

அன்பின் வித்யாநந்தினி, ஸ்வேதா, ஜானகி, மோஹனப்ரியா, அம்முலு, ரஸியா அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். உங்கள் அனைவரது பாராட்டும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.
-நர்மதா :)
பி.கு: மோஹனப்ரியா, நான் இதற்கு எதுவும் பயிற்சி எடுக்கவில்லை. சொந்த ஈடுபாடுதான் :)

it's very nice method.
but i cnnot understsnd about பைன் கோன்கள்
what is it.
pls reply it.
i'm in Jaffna. may i know ur birth place?
suba

be happy

அன்பின் சுபா,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். பைன் கோன்கள் என்பது பைன் மரத்தின் காய்கள் (உண்மையில் பைன் மரத்தின் சூல்வித்தகங்கள்) இது இலங்கையில் மலைநாட்டில் எடுக்கலாம். யாழில் கிடைக்காது. நானும் யாழ் நகர்தான். :)
-நர்மதா:)

அடிக்கடி பேசுங்க நர்மதா..கேக்கவே நல்லா இருக்கு நீங்க பேசரது ..மலைநாடு யாழ் ங்கரது இலங்கையில் உள்ள ஸ்தலங்களா

நர்மதா உங்க கை திறன் அனைத்த்தும் அருமை அதோடு உங்க இலங்கை தமிழ் எனக்கு பிடிக்கும்.
கை திறன் வேலையேல்லம் செய்ய பிடிக்கும் ஆனால் பொருமை இல்லை.
எம்ட்ராயரி,கூடை பிண்ணுதல், ஸ்பான்ச் பொம்மை, பிளெவர் வேஷ் எல்லம் ஸ்கூல் படிக்கும் போது ஆக்டிவிடி பீரியடில் செய்தது.
இப்போ எல்லாம் மறந்துவிட்டது, ஒரு ப்ளெயின் சேலையில் பூ போட ஆரம்பித்தேன் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பூவா ஆறு வருடம் கழித்து அதை முடித்தேன்.
Jaleela

Jaleelakamal

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

hi friends i am taking beauticion classes with CENTRAL GOVT CERTIFICATE.
All beauty services at your door step in low cost.

any friends need just give a call in this number: 9551201210