மசாலா சுண்டல்

தேதி: November 29, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை சுண்டல் - 1/4 கிலோ,
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 2,
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
இஞ்சி - சிறிது,
கசகசா - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லி - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.


 

சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் ஐந்தாரு விசில் விட்டு வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, தேங்காய் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்ததை ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
மசாலா நன்கு வாசம் வந்ததும் வேக வைத்த சுண்டல் சேர்த்து கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவவும்.


மாலை டிபனாகவும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் செல்வி மேடம்,
பீர்க்கங்காய் பால் கடைசல் மற்றும் மசாலா சுண்டல், நேற்று இரவு செய்தேன். மிக நன்றாக இருந்தது.சாதத்துக்கு இரண்டும் பொருத்தமாகவும் இருந்தது. தங்கள் குறிப்புக்கு நன்றி...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்பு ஆயிஸ்ரீ,
இந்த குறிப்பை பார்த்தா எனக்கு சிரிப்பா வரும். ஒரு நாள் நானா புதுசா செய்து பார்க்கலாம்னு இப்படி செய்து பார்க்க நல்லா இருக்கவே அடிக்கடி செய்யும் குறிப்பாக மாறியது. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா உங்களுடைய குறிப்பில் மசாலா சுண்டல் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அன்பு துஷ்யந்தி,
நலமா? ரொம்ப நாளாச்சு. மன்னிக்கவும். தாமதமாக பதில் கொடுக்கிறேன். காரணம் தெரிந்திருக்கும்:-(
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.