இலையப்பம்

தேதி: December 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழை இலை - 1 அல்லது பூவரசு இலை - 10
மேல் மாவு செய்ய:
இடியாப்ப மாவு - 1 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை (மாவில் உப்பு சேர்க்கப்பட்டிருந்தால் தனியே உப்பு சேர்க்க வேண்டாம்)
பூரணம் செய்ய:
பாசிப்பருப்பு(பொங்கல் பருப்பு) - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெல்லம் - 100 கிராம் (கூடுதல் இனிப்பு விரும்பினால் அதிகம் சேர்க்கவும்)
ஏலக்காய் - 2
நெய் - 2 மேசைக்கரண்டி


 

வாழை இலையை 15 செ.மீ அளவுள்ள துண்டுகளாக கிழிக்கவும் (நடுவிலுள்ள பெரிய காம்பை நீக்கி விட்டு சதுர துண்டுகளாக கிழிக்கவும்).
பூரணம் செய்ய:
பாசிப்பருப்பை 1/2 தேக்கரண்டி நெய்யில் சிவக்க வறுத்து வேக விடவும்.
மிகவும் குழையாமல் வேக வைக்கவும்.
வெல்லத்தை பொடித்து கால் கப் தன்னீர் ஊற்றி கரைத்து வடிகட்டி அடுப்பில் ஏற்றவும்.
வேகவைத்த பருப்பு(தண்ணீர் இருந்தால் வடித்து விடவும்) மீதமுள்ள நெய் பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும்போது தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
மேல் மாவு செய்ய:
இடியாப்ப மாவில் 1 கப் இளஞ்சூடுள்ள தண்ணீர் விட்டு கிளறவும்.
தேவைப்பட்டால் மேலும் சிறிது இளஞ்சூடுள்ள தண்ணீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு கிளறவும்.
வாழை இலை அல்லது அரச இலையில் எலுமிச்சை அளவு மாவை வைத்து மிக மெலிதாக பரத்தவும்.
நடுவில் கொஞ்சம் பூரணம் வைத்து இலையோடு சேர்த்து பாதியாக மூடவும்.
எல்லா அப்பமும் தயாரான பிறகு இட்லி பானையில் அல்லது குக்கரில் ஆவியில் 20 நிமிடம் வேக விடவும். சுவையான இலையப்பம் ரெடி.


ஒரே ஈட்டில் அதிக அப்பங்களை வைத்தால் சரியாக வேகாது. பானை அல்லது குக்கரின் அளவை பொறுத்து 5 அல்லது 6 வைத்து வேக விடவும்.
பூவரசு இலை கிடைத்தால் அதையே பயன்படுத்தவும். கல்லீரலை(லிவர்)பலப்படுத்தும். அப்பத்திலிருந்து இலையை பிரித்தால் எளிதாக ஒட்டாமல் பிரிந்து வரவேண்டும். இதுதான் அப்பம் வெந்து விட்டது என்பதற்கான பதம்.

மேலும் சில குறிப்புகள்