அனுமதி இலவசம்

அன்புள்ள அருசுவை நெஞ்சங்களே! குழந்தைகள் என்றால் நமக்கு மிகவும் பிடிக்கும்...ஆனால் சில பேர் நாம் இருவர் நமக்கு ஒருவர்...நாம் இருவர் நமக்கு இருவர்...சொல்கிறார்கள்...இன்னும் சிலறோ நிறய பெத்துக்கனும்னு ஆசை படுறாங்க(நம்ம தளிக்கா மாதுரி..ஆமாங்க தளிக்கா 1 டஜன் பெத்துக்க போறாங்கலாம்..ஹா ஹா திட்டாதீங்க தளிக்கா)இதில் நீங்க எந்த ரகம்?அதை பற்றி ஜாலியா பேசலாம்...வாருங்கல் அனுமதி இலவசம்..

இந்த திரட்டில் ஆஜராகுங்க அன்பு நெஞ்சங்கலே...
அன்புடன் மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்கு 1 டசன் என்ன 9 டசன்னாலும் ப்ரச்சனையில்லை..என்ன என் கனவர் வீட்டை விட்டு ஓடிடுவார் :-))..இல்லாட்டி சொந்தமா சர்கஸ் கம்பனி ஒன்னு ஆரம்பிச்சு வித்த காட்டி பொழக்கனும் இப்ப.
எங்கம்மா கூட இருந்தா ஒரு 5 குழந்தை வரைக்கும் போலாம்...இல்லாததால 2 தான்னு முடிவு பன்னியாச்சு..இது போல ஒரு வாக்கெடுப்பை முன்னயே எடுத்ததால இங்க பதிவு விழுரது கொன்cஜம் கஷ்டம் தான் மர்ழியா

ஹாய் எனக்கும் ஒரு டஜன் பெத்துக்கணும்ன்னு தான் ஆசை, ஏன்னா அப்ப தான் வீடு கல கலன்னு ஜாலியா இருக்கும், ஆனா நாடு தாங்காதே, அதனால் மூன்றாக குறைத்துக் கொண்டுள்ளேன், வரப்போற கணவர் என் விருப்பம் மூன்று. இல்லைனா கண்டிப்பா ரெண்டு. ஒண்ணு கண்டிப்பா பத்தாதுப்பா

அன்புடன்
பவித்ரா

பவி குடுமார்னிங்...

டஜன் பெத்துக்க உன் உடம்பு தாங்காதும்மா கண்ணே.... முதல்ல உடம்ப தேத்து... பவியின் வருங்கால கணவரே கவனிக்க... யாருப்பா அது... எங்கப்பா இருக்கீங்க.. சீக்கிரம் வந்து பவியின் ஆசையை தீர்த்து வைங்கப்பா....

எனக்கு 1 போதும்பா.. அத ஒழுங்கா வளத்து ஆளாக்கினா போதும்னு நினைக்கிறேன்..

இதே மாதிரி ஒரு இழை அட்மின அண்ணா ஆரம்பிச்சுருக்காருன்னு நினைக்கிறேன்..அதுல எல்லாரும் தங்கள் பதிவ போட்டிருக்காங்க.. ஒரு மாசம் தான் ஆகிருக்கு... அத போய் பாத்து தேடி எடு பவி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


அறுசுவை உறுப்பினர்கள் 24920!

அதுல என்னை தவுத்துடுங்கோ!

நேக்கு இப்போ வரைக்கும் 24919+ 2 =24921 குழந்தேள் இருக்கா!

(+2 என் பொண்கள்) !

அறுசுவைல இருக்கறவா எல்லாருமே நேக்கு கோந்தேள்தான்!

(வயசுல மூத்தவாளா இருந்தாலும்)!

கடவுளையே கோந்தையா பாக்கற இந்தியாவுல நான் பொறந்துருக்கேனாக்கும்!

(கின்னஸ் ரெக்கார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் பா எனக்கும் கொழந்தைங்கனா ரொம்ப இஷ்டம் என் கணவருக்கும் கொள்ளை பிரியம்.
இஷ்டம் என்பதற்காக நாம் நிரைய பெற்று நாட்டை கஷ்ட்டப்படுதமுடியுமா அதனால் எனக்கு 2 போதும் ஆண் பெண்
என்ற வித்தியாசம் இல்லை.என் கொழந்தைகள் எனக்கு பொக்கிஷம்

மர்ழியாநூஹு......
உங்களுக்கு எவ்வளவு வேண்டும்னு சொல்லவே இல்லையே???
தளிகா...
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் பொறுமை....

என்னாலே இரண்டை வைத்தே சமாளிக்கவே முடியலை......ஆனால் என் கணவருக்கோ ஆல் வுமன் கிரிகெட் டீம் ஆரம்பிக்க ஆசை அதும் வித் "SUBSTITUTES"..... ஆளை விடுங்கப்பா சாமி.....

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ராதாக்கா ஒன்னே ஒண்ணுன்னா பெரியவன் ஆனா அவன் குழந்தைகளுக்கு சித்தப்பா பெரியப்பா எல்லாம் இருக்க மாட்டாங்க. அதனால தான் நிறைய பெத்துக்கணும் அக்கா, எனக்கு ரெட்டை குழந்தைங்கன்னா ரொம்பவே உயிர், பார்ப்போம், நம்ம கையில் என்ன இருக்கு.

அது நாம் இருவர் நமக்கு இருவர் என்பதை பற்றிய இழைதானே, தூசி தட்றேன் முடிந்தவரை.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்