உதிரி பக்கோடா

தேதி: December 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
வத்தல் - 6
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - சிறிது
நச்சீரகம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 மேசைக்கரண்டி
சோடா உப்பு - சிறிது
எண்ணெய் - பொரிக்க (கடலை எண்ணெய் அல்லது கோல்ட்வின்னர்)
முந்திரி பருப்பு - 10


 

முதலில் கடலைமாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து வைக்கவும்.பின் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் இரண்டாக நறுக்கி போடவும்.

பின் அம்மியில் வத்தல், நச்சீரகம், தோல் நீக்காத பூண்டு, தோல் நீக்காத மீதி உள்ள 4 அல்லது 5 வெங்காயம், கருவேப்பிலை இவற்றைவைத்து லேசாக தட்டவும்.

இந்த மசாலாவை கடலை மாவில் பொட்டு , நறுக்கிய முந்திரி பருப்பையும் சேர்த்து நெய்யை சூடாக்கி ஊற்றி பிரட்டவும்.

பின் சிறிது தண்ணீர் தெளித்து லேசாக உதிர்த்துக்கொள்ளவும்.

பின் இந்த உதிர்த்த மாவை எண்ணெய்யை சூடாக்கி பொறித்து எடுக்கவும் சுவையான உதிரி பக்கோடா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் பக்கோடா செய்வேன். இந்த மாதிரி உதிரியாக வந்ததில்லை. இந்த தடவை அருசுவை பார்த்து பக்கோடா செய்யலாம் என்று உங்க உதிரி பக்கோடா செய்தேன். உண்மயிலே ரொமப நன்றாக இருந்தது.

நன்றி.

எப்படி இருக்கிறீர்கள் வீட்டில் குழந்தைகள் நலமா. எனது குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு நன்றி.

அன்புடன் கதீஜா.