தேதி: December 5, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இலங்கைத் தமிழரான <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a> அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். அனைவரது பாராட்டினையும் பெற்றவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிக எளிதாகவும் இருக்கும்.
கடலை மாவு - ஒன்றரை கப்
மைதா மாவு - அரை கப்
ஓம பவுடர் - 4 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
எள்ளு - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
மைதாமாவை ஆவியில் 10 - 15 நிமிடங்கள் அவித்து அரித்து ஆறவிடவும்.

அவித்த மைதா மாவுடன், கடலைமாவு, ஓமம், மிளகாய்த்தூள், உப்பு, சேர்க்கவும்.

அத்துடன் வெள்ளை எள்ளுவையும் சேர்த்து ஒன்றாக கலக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் காய்ச்சவும்.

காய்ச்சின தேங்காய்ப்பாலை கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக விட்டு குழைக்கவும்.

தேங்காய்ப்பால் போதவில்லையாயின் சிறிது சுடுதண்ணீரும் சேர்க்கலாம். மாவை முறுக்கு பிழியும் பதத்திற்கு (சற்று கெட்டியாக) பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை முறுக்கு உரலினுள் போட்டு நட்சத்திர அச்சு வழியாக முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை போடவும்.

முறுக்கு சற்று சிவக்க வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து அரித்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

இப்போது சுவையான ஓம முறுக்கு தயார். முறுக்கு உரல்/அச்சு இல்லாவிட்டால் நட்சத்திர ஐஸிங் நாஸிலாலும் போடலாம். ஒரு ஐசிங் பை (Icing bag) அல்லது zip-log பையின் மூலையை வெட்டி அதனுள் நாஸிலை வைத்து பையினுள் மாவை நிரப்பி முறுக்கு பிழியலாம். மைதாவை அவிப்பதற்கு பதிலாக வறுத்து ஆறவிட்டும் சேர்க்கலாம்.

Comments
My famiy love murukku. I am
My famiy love murukku. I am going to try this tomorrow. I never made murukku this way. So I am looking forward to making this. Thanks.
ROMBA NEATA PERFECTA IRUKKU!GREAT!
பார்கவெய் எவ்வளவு அலகா இருக்கு...கன்டிப்பா செஇது பார்கனும்.
THE WAY TO HAPPINESS,TO MAKE OTHERS HAPPY
ROMBA NEATA, PERFECTA IRUKKU! GREAT!
பார்கவெய் எவ்வளவு அலகா இருக்கு...கன்டிப்பா செஇது பார்கனும்.
THE WAY TO HAPPINESS,TO MAKE OTHERS HAPPY
வணக்கம் நர்மதா
வணக்கம் நர்மதா, உங்கள் ஓமமுறுக்கு நன்றாக இருக்கிறது. இதற்கு கோதுமைமா பாவிக்கமுடியாதா? நன்றி.
THuSHI
ஓமமுருக்கையே பார்த்து போரடிக்குதுப்பா
யாரும் செய்துபார்க்கலாம் பகுதியில் ஓமமுருக்கு செய்முறையும் படமும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக இருக்கிறது. வேறு ஏதாவது மாற்றலாமே. ஏன் சகோதரிகள் எதுவும் அனுப்பவில்லையா அல்லது சோம்பேரித்தனமா? போரடிக்குதுப்பா வேறு மாற்றுங்கள்.