ஈஸி கோழி வறுவல்

தேதி: December 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி கறி -- 500 கிராம்
பெரிய வெங்காயம் -- 1 என்னம் (நீளமாக நறுக்கியது)
நல்லெண்ணைய் -- 10 டீஸ்பூன்
தயிர் -- 1 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
பச்சை மிளகாய் -- 5 என்னம்
சீரகம் -- 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1 டேபிள் ஸ்பூன்


 

கோழித்துண்டுகளை தயிரில் தேவையான உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
பின் ஊற வைத்த கோழியை போட்டு நன்றாக கிளறவும்.
மூடி வைத்து அவ்வப்போது கிளறி எண்ணைய் மேலெ மிதந்து வரும் வரை சமைத்து இறக்கி பறிமாறலாம்
ஈஸி கோழி வறுவல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்