200 அடித்த நாட் அவுட் ஜலீலாவிற்கு,

200 அடித்த நாட் அவுட் ஜலீலாவிற்கு,
பாராட்டுக்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புள்ள ஜலிலா,
பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி

ஹலோ ஜலீலா அக்கா,

நலமா. நீங்களும் இந்த வார அசத்தல் ராணியாகிட்டீங்க. 200 குறிப்புகள் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் சமையல் குறிப்பு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட பயனுள்ள குறிப்புகளும் தந்துள்ளீர்கள். இன்னும் நிறைய கொடுக்க வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.

ஜலீலா அக்கா, ஆபீஸ் வேலை, வீட்டு வேலை , பசங்கள் பாத்துக்கறதுன்னு பிஸியா இருந்தாலும் குறுகிய காலத்தில் 200 அடித்து விட்டீர்கள், பாராட்டுக்கள், அறுசுவையில் உங்கள் பங்களிப்பு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மாலினி

அதிவேகமாக குறிப்புகள் கொடுத்ததற்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்கவும் இப்பொழுதே வாழ்த்தி விடுகிறேன்.
அன்புடன் கதீஜா.

ஹை… நம்ம ஜலீலா இரண்டாவது செஞ்சுரிய போட்டுட்டாங்கப்பா. போடுவாங்களா மாட்டாங்களான்னு ரெண்டு நாளா காத்துட்டிருந்தேன். தாண்டி தண்டி,குதிச்சு குதிச்சுன்னு ஒரு வழியா குறிப்பை கொடுத்திட்டீங்க. வாழ்த்துக்கள் ஜலீலா.

வாழ்த்தி கொண்டிருக்கும் அனவருக்கௌம் என்னுடைய நன்றி. முதல் முதல் கிறிபு கொடுக்க ஆரம்பிக்கும் போது அன்னாந்து பார்த்து ஒன்றே டைப்பண்ண முடையவில்லை மஹராசிகள் எப்படிதான் கொடுக்கிறார்களோ என்று நினைத்தேன்.ஒன்று நினைத்தால்ல் எப்படியும் முடிக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா,
200 குறிப்புகள் கொடுத்து இரண்டாவது சதத்தை அடிச்சுட்டிங்க எனது வாழ்த்துக்கள். இப்படியே 3-வது சதம்,4-வது சதம்,5-வது சதம்,,........கொடுத்துக்கிட்டே இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் திருமதி ஜலீலா, குறிப்பு கொடுக்க தொடங்கி மிக விரைவிலேயே இரண்டு சதங்களை அடித்து சாதனை புரிந்துவிட்டீர்கள் பாராட்டுக்கள். குறிப்புகள் மட்டுமன்றி நேயர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பதிலும், ஆலோசனைகள் வழங்குவதிலும், சிறந்து விளங்குகின்றீர்கள். இதுப் போலவே என்றென்றும் தங்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

அன்பு ஜலீலா,
200 குறிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இன்னும் பாக்கி இருப்பவர்களும் உங்களை அண்ணாந்து பார்க்க வைக்க வாழ்த்துக்கள். சமையல் குறிப்பு என்றில்லாமல், மற்ற குறிப்புகளையும் வரிசைப்படுத்தினால் அதிலும் நீங்கள்தான் முதலில் இருப்பீர்கள். பாராட்டுக்கள்.
(அப்பாடா!கஜினி முகம்மது என்கிட்ட தோத்துட்டாரே, நான் இந்த பதிவை போட எடுத்துகிட்ட முயற்சில)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஜலீலா 200 குறிப்புகள் கொடுத்து சாதனை புரிந்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும். யாருக்கு எந்த சந்தேகம் என்றாலும் ஒடோடி வந்து உதவியும், நகைச்சுவையாக பேசும் உங்கள் பாங்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மேலும் சில பதிவுகள்