தேதி: December 17, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோவா -- 2 கிலோ
சோடா உப்பு -- 1 டீஸ்பூன்
டால்டா -- 300 கிராம்
மைதா -- 250 கிராம்
சர்க்கரை -- 2 கிலோ
நெய் -- 100 கிராம்
மைதாமாவுடன் சோடாஉப்பு, நெய் சேர்த்து நன்கு பிசையவும்.
இதனுடன் கோவாவையும் சேர்த்து மெதுவாகும் வரை நன்றாக அழுத்தி பிசையவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
வாணலியில் டால்டா விட்டு பிசைந்த மாவை உருண்டைகளாக பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு ஊறவைக்கவும்.
மலாய் கஜா ரெடி.
Comments
கலாய் மஜா!!
சுபா இதன் பேரே சூப்பரா இருக்கு. மலாய் கஜா,கலாய் மஜா!!எப்படி பிடிக்கிறீர்கள் பேரை?
மாலினி