பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனதினிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜானு,பெருநாள் எப்படி போச்சு?என்ன நம் அருசுவை நேயர்கள் ஒருவரின் பேரைக் கூட விடவில்லை போலிருக்கே!புட்டிங் செய்து பார்த்தீங்களா?உங்களுக்கும் என் பெருநாள் வாழ்த்துக்கள்.

Eat healthy

அருசுவை நேயர்கள் அனைவருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.இன்ஷா அல்லாஹ் விரைவில் நாம் நம் ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

Eat healthy

ரஸியா நிஸ்ரினா! வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...! எப்படியிருக்கிறீர்கள்? எப்போதும் உங்க மகள் பெயரை சேர்த்துதான் உங்களை அழைக்கவேண்டுமா? உங்களை எப்படி அழைப்பது? ரஸியா நம்பர் 2 அல்லது வேறு சிம்பிளான பெயர் உண்டா? :) நீங்கள் அறுசுவையில் நுழைந்தவுடனேயே நீங்களும் ஃபிரான்ஸில்தான் இருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொண்டேன். :) ஆனால் எங்கிருக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? இந்தியாவில் உங்களுக்கு எந்த ஊர்? உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

வலைக்குமுஸ்ஸலாம். நலமா. மகன் எப்படி இருக்கிறார். எங்கள் வீட்டில் பெருநாளைக்கு இப்படி தான் செய்வது வழக்கம்.

அன்புடன் கதீஜா

என் பெயர் ரஸியா பானு,நீங்களும் என்னை அப்படியே அழைக்கலாம்.நான் evry-ல் இருக்கிறேன்.எனக்கு சொந்த ஊர் காரைக்கால்.ஏற்கனவே ஒரு ரஸியா இருப்பதால் தான் என் பெயருடன் என் மகள் பெயரையும் சேர்த்து எழுதினேன்.

Eat healthy

என் பெயர் ரஸியா பானு,நீங்களும் என்னை அப்படியே அழைக்கலாம்.நான் evry-ல் இருக்கிறேன்.எனக்கு சொந்த ஊர் காரைக்கால்.ஏற்கனவே ஒரு ரஸியா இருப்பதால் தான் என் பெயருடன் என் மகள் பெயரையும் சேர்த்து எழுதினேன்.

Eat healthy

உங்கள் பெயர் பெருநாள் வாழ்த்தில் விடுபட்டுவிட்டது!நலமாக இருக்கீங்களா!பெருநாள் இனிதாக போனதா?உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன்!சரிevry யில் உங்களுக்கு ஜான்மாவை தெரியுமா?எனது பெயரும் ரஸியா பானு தான்!

அல்ஹம்துலில்லாஹ் ரஸியா!நான் நலமாக உள்ளேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?ஜான்மா மாமியை எனக்கு நன்றாக தெரியும்.உங்களுக்கு அவர்களை எப்படி தெரியும்?நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Eat healthy

cergy யில் இருக்கிறேன்!அவர்கள் என் பெரியத்தா மகள் ஆச்சியின் கணவரின் மச்சி!ஆக எனக்கு உறவாகிறார் சரி உங்களுக்கு மாமி என்றீர்களே அவர்களிடம் உங்கள் போன் நம்பர் இருக்கிறதா?என் போன் நம்பர் அவர்களிடம் இருக்கிறது!இன்ஷா அல்லாஹ் பேசுவோம்!

எனக்கு ஒரு சந்தேகம் நம்முடைய உணவில் வினிகர் சேர்க்கலாமா? வினிகர் வயிற்றுக்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள். ஆனால் சிக்கன் போன்ற அசைவ உணவு வகைகளுக்கு வினிகர் சேர்த்தால் நல்ல சாஃப்ட் ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. யாராவது விளக்கமாக சொல்லுங்களேன்..... ப்ளீஸ்..

மேலும் சில பதிவுகள்