பாகற்காய் வதக்கல்

தேதி: December 19, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாகற்காய் - 1/4 கிலோ
உப்பு - தேவையான அளவு
என்ணெய் - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்


 

பாகற்காயை அலம்பி வட்ட வட்டமாக மெல்லிசாக நறுக்கி கொட்டைகளை நீக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பெருங்காயத் தூள் சேர்த்து நறுக்கி சுத்தம் செய்த பாகற்காயை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து மொறு, மொறுவென்று வறுபடும் வரை வதக்கவும்.
மிகவும் சுவையாக இருக்கும் இந்த வறுவல்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மேடம்,
கடந்த வாரம் தங்களின் பாகர்காய் வதக்கல் செய்தேன். ரொம்ப ஈசியாகவும், நன்றாகவும் இருந்தது. நன்றி

indira

பின்னூட்டத்திற்கு நன்றி
இப்பல்லாம் நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், சோளமாவு, மஞ்சள் தூள் சிறிது சேர்த்துப் பிசறி 10, 20 நிமிடம் வைத்துவிட்டு பிறகு வதக்குகிறேன். ரொம்ப நன்றாக வருகிறது. செய்து பாருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஒக்கே மேம் அடுத்த முறை இவ்வாறு செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி

indira

இன்று உங்களின் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பாருக்கு பொருத்தமாயிருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மாமி நலமாக இருக்கிறீங்களா.இந்த பாகற்காய் வதக்கலில் நான் அரிசிமாவுதான் போடுவேன். இப்ப நீங்கள் எழுதியபடி சோளமாவு போட்டுசெய்தேன்.நல்லடேஸ்ட்.நன்றி.அன்புடன் அம்முலு

மாமி நான் நேற்று இந்த டிஷ் செய்தேன். நான் எப்பொழுதும் சிரிது வெங்காயம் சேர்த்து செய்வேன்.நேற்று வெங்காயம் சேர்க்காமல் செய்தேன் நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

மாமி ரொம்ப நல்லா இருந்தது.வெங்காயம் சேர்க்காமலும்,சோளமாவு சேர்த்து செய்த்ததில் சூப்பரா இருந்தது.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. நர்மதா அவர்கள் தயாரித்த பாகற்காய் வதக்கலின் படம்

<img src="files/pictures/aa186.jpg" alt="picture" />