பாயா

பாயா செய்வது எப்படி?

அசைவம் பகுதியில் 'ஆடு' வை க்ளிக் செய்தால் நிறைய ரெஸிப்பீஸ்(including பாயா) இருக்கு பாருங்க.

Jaleela Kamal

ஆட்டு கால் பாயா

தேவையானப் பொருட்கள்
வேகவைக்க
----------
ஆட்டு கால் - ஒன்று முழுசு
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சமிளக்காய் - நான்கு
மஞ்சள் தூள் -கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசைக்கரண்டி
மிளகு தூள் இரண்டறை தேக்கரண்டி
தனியாத்தூள் - முன்று மேசைகரண்டி
உப்பு - தே. அளவு
தேங்காய் - ஒரு முறி
தாளிக்க
-------
எண்ணை - இரண்டு மேசைகரண்டி
பட்டை,ஏலம்,கிராம்பு - தலா இரண்டிரண்டு
இஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்து மல்லி - ஒரு கொத்து
புதினா - பத்து இதழ்

செய்முறை
காலை நல்ல உரைத்து கழுவி அதில் உள்ள அழுக்கு முடி எல்லாம் எடுத்து கழுவி ,அதில் நான்கு வெங்காயம்,நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு ,பச்சமிள்கய், தக்காளி,உப்பு தூள்,மிளகு தூள்,தனீயாதூல்,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு வெறவி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் அரை மணிநேரம் பதினைந்து நிமிடம் அதிக தீயிலும்,பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இரக்கி தேங்காய அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
தனியாக சட்டியில் எண்ணை இரண்டு மேசைகரண்டி ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலம் தலா இரண்டிரண்டு போட்டு ஒருவெங்காயத்தை போட்டு நல்ல வத்க்கி இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்து மல்லி புதினா சேர்து வெந்த்த காலி ஊற்றவும்.
காலில் கொழுப்பு அதிக இருக்கும் ஆகையால் எண்ணை கம்மியா ஊற்றினால் போதும்

குறிப்பு:
இட்லி,தோசை,இடியாப்பம்,ஆப்பம்,ரொட்டி முதலுவற்றிற்கு இந்த ஆட்டுகால் பாயா ஒரு சூப்பர் சைட் டிஷ். குளிர் காலத்தில் இந்த கால் பாயாவை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். சளி பிடித்திருந்தால் மிளகு கூட கொஞ்சம் கூட்டிக்கொள்ளுங்கள். இந்த கால் பாயா கால் வலிக்கு நல்ல

Jaleelakamal

vinnie
உஙகளின் பதிலுக்கு நன்றி

ஜலிலா
உஙகளின் பதிலுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்