மைதா பணியாரம்

தேதி: December 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 ஆழாக்கு
சர்க்கரை - 200 கிராம்
வாழைப்பழம் - 2
ஏலக்காய் - 4
எண்ணெய் - 500 மி.லி(1/2 லிட்டர்)
உப்பு - ஒரு துளி


 

மைதாவில் உப்பு, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும். கரண்டியில் மொண்டு ஊற்றும் அளவிற்கு திக்காக இருக்க வேண்டும்.
ஏலக்காய் தட்டி மைதாவில் போட்டு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கரண்டியால் மொண்டு எண்ணெயில் விட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்