திருமணப் படங்கள் பார்க்க வேண்டுமா? :-)

எங்களது திருமணத்திற்கு தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், மன்றம் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. நடந்த கதையை முழுமையாக இங்கே சொல்ல இயலாததால், ஆவலுடன் கேட்ட கர்ப்பிணி சகோதரிக்கு எனது இயலாமையை மட்டும் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன். எனது திருமணம் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு. யாருமே எதிர்பாராத வண்ணம், எல்லாமே மிக விரைவாக நிகழ்வுற்றது. எங்கள் இருவருக்குமே நடந்தவை அனைத்தும் கனவு போல் இருக்கின்றது. ஆரம்பக்கால சோதனைகள் முடிந்து, இனி நல்லவை மட்டுமே நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எங்கள் திருமண வாழ்க்கையை தொடங்குகின்றோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்ற பழமொழியைக் குறிப்பிட்டு, புதுப்பெண்டாட்டியுடன் போதும் உல்லாசம் என்பதுபோல் அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்த சகோதரிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்பும் தகவல் இதுதான். நீங்கள் நினைப்பதுபோல், இங்கே நான் கடமை மறந்து, உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டு, மகிழ்ச்சியாக நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது நிலையை வெளியில் சொல்ல முடியவில்லை. நான் சந்தித்து வரும் பிரச்சனைகள், அதனால் உண்டாகும் மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து என்னை அறுசுவைக்கு பணியாற்ற முடியாமல் செய்துவிட்டன. பிரச்சனைகளை பேசுவது, சமாளிப்பது, எதிர்கொள்வது என்பதிலேயே பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன. இதனால்தான் நான் குறிப்பிட்டவாறு என்னால் அறுசுவையில் மாற்றங்கள் கொண்டு வர முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகின்றேன். பிரச்சனைகள் எனக்கு மட்டும் என்றில்லாமல், அறுசுவையில் பணியாற்றுபவர்களுக்கும் இருந்த காரணத்தால், அறுசுவை பணிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம். விரைவில் அறுசுவைக்கு புதிய பொலிவைக் கொடுக்கும் முயற்சியில் இறங்குவோம்.

எனக்கு தனிமின்னஞ்சல்கள் நிறைய வந்திருக்கின்றன. என்னால் யாருக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. இயன்ற அளவிற்கு கொடுக்க முயற்சிக்கின்றேன். தற்போது எனது மெயில் சர்வரை செயல் இழக்கச்செய்திருப்பதால், உடனே பதில் கொடுத்தல் சிரமம். விரைவில் அதனை சரிசெய்து அனைவருக்கும் பதில் கொடுக்கின்றேன்.

திருமணப் படங்களை வெளியிடச்சொல்லி நிறைய சகோதரிகள் கேட்டிருந்தனர். எங்களது திருமணம் கோயிலில் நடைபெற்றது என்பதால் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. எடுத்த படங்களை மீண்டும் டிஜிட்டல் கேமராவில் எடுத்து, கீழ்க்கண்ட லிங்க்கில் சில படங்களை கொடுத்துள்ளேன். படங்களின் தரம் மோசமாக இருக்கும். கோபித்துக்கொள்ள வேண்டாம்.

<a href="http://www.arusuvai.com/marriage.html" target="_blank"> திருமணப் படங்கள் </a>

சரி, இப்போது முக்கியமான விசயத்திற்கு வருகின்றேன். எனது திருமணம் நான் உட்பட யாருமே எதிர்பாராத வண்ணம், திடீரென நடைபெற்றுவிட்டது. யாருக்கும் அழைப்பு கொடுக்க இயலவில்லை. அதனால் திருமண வரவேற்பினை அழைப்பு கொடுத்து கொண்டாட முடிவு செய்துள்ளோம். இப்போதுதான் தேதியை முடிவு செய்தோம். வரும் ஜனவரி 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நாகையில் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது. இது ஒரு முன் தகவல். முறையான அழைப்பினை அழைப்பிதழ் தயாரான பின்பு இங்கே கொடுக்கின்றேன். சகோதர சகோதரிகள் அனைவரும் நாகை பயணத்திற்கு தயார் செய்துகொள்ளவும்.

வரவேற்பின்போது இரவு விருந்தினை வித்தியாசமாக கொடுக்க நிறைய திட்டங்கள் போட்டு வருகின்றோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாய் இருக்கும் உணவுகள் பலவற்றை அங்கிருந்து வரவழைக்கவுள்ளோம். உதாரணமாக, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய்.. இப்படி தென் தமிழக சிறப்பு பலகாரங்களை கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளோம். வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம், என்ன மாதிரி மெனு வைக்கலாம் என்பதற்கு உங்களின் ஆலோசனைகளை வாரி வழங்குங்கள். மற்ற தகவல்களை பின்னர் தெரிவிக்கின்றேன்.

மீண்டும் எனது நன்றிகள் :-)

வாழ்த்துக்கள் ,சோதனை பல கடந்தாலும் இருவரும் இனி வரும் காலத்தில் குடும்ப வாழ்கையில் சாதனை பல படைக்க வாழ்த்துக்கள். இப்போது உங்களால் சொல்ல முடியாமல் போன கதையின் முழு உரிமையை எனக்கு கொடுத்தால் 10 வருடம் கழித்து ஒரு படம் எடுப்பேன். கதை கண்ணாமூச்சி ஏஆனட ஸ்டைலில் இருக்கும் என்ற நம்பிக்கையில் ராயல்டி கேட்கிறேன்.
Be happy always and enjoy life.

டியர் அட்மின்
பாபு தம்பி & பாப்பி

முதலில் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
கவலை வேண்டாம் திருமண் வரவேற்பு நல்ல படியாக நடைபெறும்.
கூடவே தலை பொங்கல் வாழ்த்துக்களும்.

உங்களுக்கு டைம் இருக்க இல்லை என்று தெரியவில்லை.
டிப்ஸ்ஸுக்கென்று தனி தலைப்பு போடுங்கள் அவர் அவர்களுக்கு தேரிந்த்தௌ போட்டட்டும்.
ஏனென்றால் நான் கொடுத்த இஞ்சி சாறு, ஜலதோஷத்திற்கு எல்லாம் யாரும் மறுபடியும் தேடி பிடித்ஹ்டு படிக்க மாட்டர்கள்.
அதேல்லாம் எங்க பாட்டி உடைய அம்மா சொன்னது, எல்லோருக்கும் பயன்படனும்.

ஜலீலா

Jaleelakamal

Hi Admin,

Your Marriage pictures remembers my marriage because even we didn't smile in any picture, same ours also love marriage. But now we lead happy life with two kids. So i Pray for you guys.
Sujatha Karthikeyan

தங்கள் திருமண படங்களை அறுசுவை சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருமண படங்கள் நன்றாக அமைந்திருக்கிறது.நீங்கள் சொன்னது போல் "ஆரம்பக்கால சோதனைகள் முடிந்து, இனி நல்லவை மட்டுமே நடக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" . மனதில் மகிழ்ச்சியுடனும் அருகில் எப்பொழுதும் அண்ணியுடனும் அறுசுவை என்றும் தடையுறாது வெற்றியை நோக்கி செல்ல வாழ்த்துக்கிறேன்..உங்கள் இருவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள அண்ணா திருமணபோட்டோ காட்டியது மிகவும் சந்தோஷம்.அதே சமையம் நீங்க வார்த்தயால பிரச்சனை என்று சொல்லியது போட்டோவை பார்த்தவுடன் தெரிந்தது.சகோதரி சொல்வது போல படத்தில் சிரிப்பை கானோம்.நடந்தவைகலை எல்லாம் மறந்து இனி வாழ்க்கையில என்றும் சந்தோஷமாக இருக்க இறைவன் அருள் புரிவானாக.இனி ரிஷப்ஷன் போட்டோவில் சந்தோஷ முகத்துடன் பார்க்க ஆவல்.

அன்புடன் பர்வீன்.

பாபு, பாப்பி பெயர் பொருத்தம் இருக்கு. அதே மாதிரி எல்லாம் பொருத்தமாய் இருந்து நன்றாய் நலமாய் இனிதே வாழ்க்கை நடத்த வாழ்த்துக்கள்.
பாப்பியின் பிள்ளையார் என்றும் துணை இருப்பார்
போட்டோ எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

anbudanஹல்லோ அட்மின்,

எப்படி இருக்கீங்க? திருமண புகைப்படங்கள் அருமையாக உள்ளது. என்ன ஒரு சிறிய புன்னகை இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்.புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் கொண்டு வரும், அருசுவை சகோதரிகளின் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் என்றும் உங்களுக்கு.
உண்டு.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

என்று அன்புடன்,
வித்யாவாசுதேவன்..

anbudan

anbudan
hai sujatha
how are u and your family, yours is love marriage
and mine is also love cum arranged marriage. vidvas at ya...... i think u can understand, keep in touch,take care,bye for now.

ever loving,
vidyavasudevan.

anbudan

அட்மின், உங்க திருமணப் படங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது. உங்கள் வாழ்வில் என்றென்றும் இன்பம் நிறைந்திட ஆண்டவனிடம் வேண்டுகிறேன். உங்கள் இருவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். இதோ நாகைக்கு வர ரெடி ஆகிகிட்டே இருக்கோம்:-)

மேலும் உங்கள் கவனத்திற்கு: சில நாட்களுக்கு முன் சகோதரி ஜலீலா அவர்களும் இருநூறு குறிப்புகளை கொடுத்தார். அவரையும் முகப்பில் வாழ்த்திவிடுங்கள்.

anbudan
hai vinni,
are u online?i saw only one photo?
how to see the other photos?
take care later ill send a mail
keep in touch.

ever lolving,
vidyavasudevan.

anbudan

மேலும் சில பதிவுகள்