பலாக்கொட்டை அவியல்

தேதி: December 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பலாக்கொட்டை - 30
முருங்கைக்காய் -3
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
முழு வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 2 கொத்து
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 1/4 கப்
மிளகாய் வற்றல் - 6
தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
பலாக்கொட்டையின் மேலே உள்ள வெள்ளை நிறத் தோலை நீக்கி விட்டு அதன் பிறகு ப்ரெளவுன் நிறத் தோலை சீவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கி பிறகு அதை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நறுக்கிய பலாக்கொட்டை மற்றும் நறுக்கின பெரிய வெங்காயத்தை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேக விடவும்.
அதில் 2 நிமிடம் கழித்து தண்ணீர் கொதித்து நுரைத்து வந்ததும் மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து 4 நிமிடம் வேக வைக்கவும்.
அதன் பின்னர் மிக்ஸியில் மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து விட்டு அதனுடன் முழு சின்ன வெங்காயத்தை போட்டு ஒன்றிரண்டாக அரைத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை பிய்த்து போட்டு கலந்துக் கொள்ளவும்.
பலாக்கொட்டை முக்கால் பதம் வெந்ததும் அதனுடன் நறுக்கின முருங்கைக்காயை சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்காமல் வேக விடவும்.
5 நிமிடம் கழித்து கரண்டியால் இரு முறை நன்கு கிளறி விட்டு மூடியை வைத்து மூடி 3 நிமிடம் வேக விடவும்.
பிறகு 3 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறிய பிறகு பலாக்கொட்டையுடன் கொரகொரப்பாக அரைத்த மசாலாவை போட்டு கிளறவும். முருங்காயுடன் மசாலா ஒன்றாக நன்கு சேரும்படி கிளறவும்.
மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பலாக்கொட்டையுடன் போட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். இறக்கும் போது ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
இந்த அவியல் கேரள மாநிலத்தில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பக்க உணவு.
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. பத்மாசினி விஜயராகவன் அவர்கள். சமையலில் 40 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ungalin recipe padi seithu paarthen.pothuvaga samayalil vengayam serka matom nanga.ethil vengayam erkamal seithal nandraga irukuma?