ஸ்வீட் சமோசா

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - ஒரு கப்
வேர்க்கடலை - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய்ப்பூ (வறுத்தது) - ஒரு கப்
ஏலக்காய் - 5
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு


 

தேங்காய், முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடித்துக்கொள்ளவும். மைதாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
எலுமிச்சை அளவு உருட்டி பூரிக்கட்டையில் வட்டமாக தேய்த்து தோசைக்கல்லை இளஞ்சூட்டில் வைத்து சப்பாத்தியிலுள்ள ஈரப்பதம் மட்டும் போகும் வரை போட்டு எடுக்கவும்.
அதை 1/2 வட்டமாக கட் பண்ணி முக்கோண வடிவில் மடித்து அரைத்தவற்றை சிறிதளவு உள்ளே வைத்து மடித்து மூடவும். எல்லா மாவையும் இதே போல் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்