காளான் தக்காளி கறி

தேதி: January 2, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பட்டன் காளான் - 200 கிராம்,
வெங்காயத்தாள் - 10,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.


 

காளானை மெலிதாக நறுக்கவும். வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி எல்லாவற்றைம் நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி எல்லாவற்றைம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
2 நிமிடம் வதக்கிய பின் அதனுடன் காளான், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் தக்காளி சாஸ் சேர்த்து 1 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.


சப்பாத்தி, புலாவிற்கு தொட்டுக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

marimalathamarai

kalan takkali kari samaithu sappittom.romba suvaiyaha irundathu.
nanri sentamilselvi

marimalathamarai

அன்பு ஜெயசக்தி,
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

super food