வாழைப்பூ தனி பஜ்ஜி

தேதி: January 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பூ -- 35 என்னம் (நரம்பு, கண்ணாடி இழையை எடுத்து வைக்கவும்)
சீரகத்தூள் -- 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
கடலை மாவு -- 1/2 கப்
பச்சரிசி மாவு -- 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்.)
சோடா மாவு -- 2 சிட்டிகை
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை -- 2 டீஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப


 

வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடம் வேகவைக்கவும்.
சோம்பு,பொட்டுக்கடலையை நைசாக அரைக்கவும்.
கடலைமாவு,பச்சரிசிமாவு,சோடாமாவை சலித்து அதில் அரைத்த கலவையை கொட்டி,சிவப்பு மிளகாய் தூள்,உப்பு,சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.
அதில் வேகவைத்த வாழைப்பூவை போட்டு பஜ்ஜி போல பிரட்டி காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான செட்டிநாட்டின் வாழைப்பூ தனி பஜ்ஜி ரெடி.


மேலும் சில குறிப்புகள்