கார அவல்

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டியான அவல் - 1/2 படி
மிளகாய் வற்றல் - 15
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் - 200 மி.லி
கொப்பரைத்தேங்காய் - ஒன்று
முந்திரி - 50 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு


 

மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை அரைத்து அவலில் பிசறி சிறிது நேரம் வைக்கவும்.
தேங்காயை மிகப்பொடியதாக நறுக்கவும். ஒரு கடாயில் நெய் விட்டு அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.
பின் முந்திரியை உடைத்து பொரிக்கவும். தேங்காயை போட்டு வறுத்தெடுக்கவும். பெருங்காயத்தை வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து காற்று புகாத கன்டெய்னரில் போட்டு மூடவும்.


மேலும் சில குறிப்புகள்