மைக்ரோவேவ் பாப்கார்ன்

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மக்காச்சோளம் (காய்ந்தது) (கார்ன்) -- 1 கப்
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
எண்ணைய் -- 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் -- 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- 1/4 டீஸ்பூன்
உப்பு -- தேவைக்கேற்ப


 

மைக்ரோவேவ்வை முதலில் 2 நிமிடம் () சூடு பண்ணி வைக்கவும்.
உப்புவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
ஒரு அவன் பவுலில் ஒரு கைப்பிடி கார்ன், கொஞ்சம் உப்பு தண்ணீர்,2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் போட்டு எண்ணையை 1/2 டீஸ்பூன் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
அவனை ஹையில் 5 நிமிடம் வைக்கவும்.
சில பாப்கார்ன் 3 நிமிடத்திலும் சிலது 5 நிமிடத்திலும் பொரியும்.
இது மிகவும் ஈசியாக செய்யும் முறை.


ஒரே சமயத்தில் எல்லா கார்ன்னையும் போடக்கூடாது...பொரியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் போடனும்.

மேலும் சில குறிப்புகள்