ரவா உருண்டை

தேதி: January 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை -- 1 கப்
சர்க்கரை -- 3/4 கப்
முந்திரி பருப்பு -- 10 என்னம்
உலர்ந்த திராட்சை -- 10 என்னம்
கல்கண்டு -- 1/4 கப்
நெய் -- 1/2 கப்
பால் -- 3 கப் (காய்ச்சியது)
ஏலக்காய் -- 5 என்னம் (பொடித்தது)


 

வாணலியில் ஒரு ஸ்பூன் விட்டு ராவையை போட்டு வறுக்கவும்.
பின் மிக்ஸியில் முக்கால் பகுதியை போட்டு நன்கு அரைக்கவும்.
சர்க்கரை பொடிக்கவும்.
வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.
பின் பாலை சூடாக காய்ச்சி வைக்கவும்.
அரைத்த ரவையுடன் அரைக்காத ரவையையும், சர்க்கரையையும், திராட்சை, முந்திரி, கல்கண்டு,ஏலக்காய் போட்டு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக சூடான பாலை ஊற்றி சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும்.
சுவையான ரவா உருண்டை ரெடி.


மேலும் சில குறிப்புகள்