வெஜ் சோமாஸ்

தேதி: January 12, 2008

பரிமாறும் அளவு: 12 சோமாஸி வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாவு தயாரிக்க:
மைதா - ஒரு கப்
ரவை - கால் கப் ( வறுத்தது)
கார்ன் ப்ளார் மாவு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
பில்லிங்க தயாரிக்க:
கேரட் - அரை கப்
கேபேஜ் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
பீஸ் - கால் கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - அரை பாகம்
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கப்
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி


 

முதலில் சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே சட்டியில் எல்லா வெஜ்டபிள், இஞ்சி பூண்டு, தக்காளி, உப்பு சேர்த்து பிரட்டவும்.
வதங்கியதும் அதில் கரம் மசாலா தூள், வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை அனைத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி ஆற வைக்கவும்.
மைதா மாவில் பிசைய வேண்டியவைகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பூரி உருண்டைகளாக போடவும்.
பூரி உருண்டைகளை மைதாவில் சிறிது அரிசி மாவு கலந்து தேய்த்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து பில்லிங்கை ஒரு ஸ்பூன் உள்ளே வைத்து வெளியில் வராதவாறு அச்சை மூடவும்.
வெளியில் வந்தால் பொரிக்கும் போது அவ்வளவு பில்லிங்கும் வெளியில் வரும்.
அச்சு இல்லாதவர்கள் சிறிய பூரி மாதிரி உருட்டி விட்டு மைதாவில் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து ஒரத்தில் இந்த கலவையை ஒட்டி ஒரு சாவியை கொண்டு மூடும் இடத்தில் லைனாக குத்தி கொண்டே வரவேண்டும்
இப்போது எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைக்கலாம்.


நோன்பில் மாலை நோன்பு திறக்கும் போது செய்யும் உணவில் இதுவும் ஒன்று .
இதை நிறைய செய்து ஒரு தட்டில் மாவு தடவி லைனாக அடுக்கி பிரிட்ஜில் வைத்து கெட்டியானதும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் போட்டு வைத்து கொண்டால் தேவையானபோது எடுத்து பொரித்து கொள்ளலாம். கார சோமாஸ், இனிப்பு சோமாஸ் குழந்தைகளுக்கு சும்மா உள்ள போய் கொண்டே இருக்கும்

மேலும் சில குறிப்புகள்