இன்றைய தினத்தை ஒரு கப் தேனீருடன் ஆரம்பிக்கலாம்

இன்றைய தினத்தை ஒரு கப் தேனீருடன் ஆரம்பிக்கலாம்

ஆஹா இந்த குளிருக்கும் மழைக்கும் நல்ல அசத்தலான டீ போட வேனாமா ..தோ டீ போட தெரியாதவங்களுக்கு சொல்லித் தறேன்.

இதற்கு தேவை
1 கப் பால்/1 டேபில்ஸ்பூன் பால்பொடி+1 கப் தன்னீர்
1 ஸ்பூன் டீத் தூள்
சர்க்கரை - 1.5 ஸ்பூன்

ம்ம்ம் இனி டீ போடலாம் முதலில் பால் பாத்திரத்தில் பாலை காய்ச்சுங்கள்..ஒரு கொதி வந்ததும் டீ தூளை போட்டு இன்னும் ஒரே ஒரு கொதி அவ்வளவு தான்..ஆஃப் பன்னி விடுங்கள்.
ஒரு கொதி வந்ததும் நிறம்,திடம்,மணம் சரியாக இருக்க வேண்டும் அது தான் சரியான முறை..ஒவொரு டீ தூளுக்கு ஒவ்வொரு அளவு 1 ஸ்பூன் என்பது லிப்டனின் அளவு
நாம் சாதாரனமாக டீ தூளை கம்மியா போட்டு கொதிச்சு கொதிச்சு நிறம் இறங்கும் ஆனால் சுவை குறையும்
ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை இட்டு அதில் கொதித்த டீயை சுட சுட ஊற்றி இரண்டு பாத்திரத்திற்கும் மாற்றி மாற்றி கடகடவென 4 முறை ஊற்றவும் அப்பொழுது சர்க்கரை கரைந்து விடும்.ஸ்பூனை போட்டு ஒரு போதும் கலக்காதீர்கள்..டீயின் ருசியையே கெடுத்து விடும்.
இப்பொழுது சுடான சுவையான டீயை நுரைக்க ஒரு கப்பில் ஊற்றி குடியுங்கள்.

இதென்னடா இது டீ போட சொல்லித் தரான்னு தானே யோசனை..ஹ்ம்ம் நான் வெளிய போனா வீடுகளில் தரும் டீ பிடிக்கிரதே இல்லை..அதான் உங்க வீட்டுக்கெல்லாம் வந்தா இப்படி செஞ்சு கொடுங்க எனக்கு போதும்.
இதில் பலரும் செய்யும் 3 தப்புகள்...டீ தூளை போட்டு நல்ல கொதிக்க விடுவது /சர்க்காஇயை சேத்தே கொதிக்க விடுவது/கரன்டியால் கலக்குவது..இது மூன்றும் செய்யா விட்டால் தான் டீ சுவையாக இருக்கும்.
சரிங்க போதும் இனியும் பேசினால் அவ்வளவு தான் இப்பவே முறைக்கிரீங்க

இதில் 3வது தப்பு நான் செய்வேன்..
இனி மாத்திக்கிரேன்..
இப்போ ரூபி நீங்க வீட்டுக்கு வரலாம்..
அசத்தலா டீ போட்டு தரேன்...
18ம் தேதி அபுதாபி வரேன்..
"Foodlands" ஹோட்டலில் ஒரு மீட்டிங் /Function ஜாலியா இருக்கும்...
ஆனால் வெளியே வரமுடியாது... 25 ம் தேதி சுத்த வர்ரோம்.. அப்பவும் வரமுடியாது..
ஒரே பிஸ்ஸி

ஹாய் ரூபி,
ஒரு டீ க்கு இவ்வளவு விளக்கமா? உங்க பதிவை படிச்சு நான் இனி நல்ல டீ போடறேன்:-( நீங்க பயபடாம எங்க வீட்டுக்கு வாங்க நல்ல டீ போட்டு தரேன். எப்படி இருக்க உங்க பொண்ணு.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

இன்னா சுஜி ஒரு டீயின்னா சும்மாவா...டீ பிரியானையை விட ரொம்ம்ப முக்கியம்..ஒரு நாளைக்கு ஒன்னுன்னாலும் அதை ஒழுங்கா செஞ்சு குடிச்சா வேற எங்கயும் புடிக்காது....இல்லப்பா ஒரு த்ரெட் போடலாம்னு நெனச்சேன்..எதையாவது கிறுக்கரதுக்கு உபயோகமா ஒன்னை போட்டேன்..அவ்ளோ தான்:-)

சுபா ஒரே ட்ரிப் தான் எப்பவும்..காலில் வீல் தான் வேனும்..ஹோட்டெலில் போய் சாப்பிட்ட காலம் மறந்து போச்சு.
இங்க எங்களுக்கு சொந்தமே நிறைய இருக்கரதால அந்த கெட் டுகெதெரே சரியா இருக்கும்..ஃப்ரென்ட்சோட போனதே இல்ல.
கலீஃபா பார்க்குக்கு வாங்க..அங்க ஆம்ஃபி தியேடர்க்கு வாங்க..நல்ல இருக்கு..ஆனால் முன் பக்கமா போனா உள்ள நடந்து சேர்ரதுக்குள்ள ஒரு வழியாயிடுவீங்க.பின்னாடி வழியா போங்க.

எனக்கும் தெரியும் டீ அப்படினா சும்மா இல்ல, எங்க வீட்லயே எங்க அம்மாவுக்கு டீ சப்பிடளைன என்னமோ மாதிரி இருக்கும்னு சொல்லுவாங்க, எங்க சொந்தக்கரங்களில் பலர் டீ மட்டும் இருந்த போதும் வேற எதுவும் தேவை இல்ல அவங்களுக்கு, அவ்வளவு டீ ரசிகைகள் அவர்கள். நானும் சும்மா தான் சொன்னேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

சரிப்பா நான் போறேன்...ட்ரம்ஸ்டிக்கை வெளியே வெச்சிருக்கேன்:-D.ஐஸ் போயிருக்கும் போய் ஏதாவது செய்றேன்.சுஜி என் பொன்னு நல்லா இருக்கா...எதுவெதுவோ பேசரா நடிக்கிரா என்னன்னு தான் எனக்கே புரியரதில்ல.இப்ப மடீல தூங்கரா..உங்க வீட்ல ?

ரூபி
எந்த டிரம்ஸ்டிக்...??

ரூபி 2 அடி நீளம் இருக்குமே அந்த ட்ரம் ஸ்டிக்கா இல்ல கோழிக்காலா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இல்லப்பா முட்டையோட அம்மாவின் கால் தான்

நான் நினைக்கிறேன் ரூபி சொன்னது கோழி கால தான் இருக்கும். எங்க வீட்ல காலைல பொங்கல் செஞ்சு சாப்பிட்டு அவரு ஆபிஸ் எடுத்துட்டு போய்ட்டாரு. காலைல கோதுமை தோசை,சாம்பார், மதியம் பருப்பு குழம்பு, அகத்தி கீரை பொரியல்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

மேலும் சில பதிவுகள்