லெமன் சந்தவை (காரம்)

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 1 கிலோ,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
=======
சின்ன வெங்காயம் - 15,
பச்சை மிளகாய் - 5,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி,
கொத்தமல்லி - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எலுமிச்சம் பழம் - 1,
எண்ணெய் - 2 கரண்டி.


 

சந்தவை செய்ய :-
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும்.
கடைசியாக எடுக்குமுன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
எடுத்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.
சந்தவை பிழிவதற்கு என தனியாக ஒரு நாழி விற்கிறது.
இட்லி வெந்ததும், அடுப்பில் வைத்துக் கொண்டே சூடாக நாழியில் இரண்டு இட்லிகளை போட்டு பிழியவும்.
இதே போல எல்லா இட்லிகளையும் பிழியவும். எல்லாமாவிலும் சேவை செய்து கொள்ளவும்.
தாளிக்கும் முறை :-
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பிழிந்து வைத்துள்ள சந்தவையை உதிர்த்து போட்டு கிளறவும்.லேசாக உப்புத்தூள் தூவவும்.
நன்கு உதிராக வந்ததும் எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.


மாவு ரொம்ப கெட்டியாகவோ, தண்ணியாகவோ இருக்கக் கூடாது. இட்லி சூடாக இருக்கும் போதே பிழிய வேண்டும், இல்லையேல் பிழிய கஷ்டமாகி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தவை எப்படி பிழிவது nisha

நிஷா

அன்பு நிஷா,
சந்தவை செய்முறை இதிலேயே முதலில் சொல்லி இருக்கேன். சந்தவை நாழி இல்லைன்னா, முறுக்கு பிழிய அஞ்சலி அச்சு இருக்குமே, அதிலும் பிழியலாம். கொஞ்சம் சிரமமாக இருக்கும். அவ்வளவுதான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.