நேந்திரம் பழ வரட்டல்

தேதி: January 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நேந்திரம் பழம் - 1
பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வெல்லம் - 50 கிராம்
ஏலக்காய் - 1
நெய் - 2 மேசைக்கரண்டி


 

நேந்திரம் பழத்தை 1 செமீ அளவு துண்டுகளாக்கவும். பாசிப்பருப்பை 1 தேக்கரண்டி நெய் விட்டு சிவக்க வறுத்து வேக விடவும்.
பருப்பு வெந்ததும் வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
ஏலக்காய், நெய், பழத்துண்டுகளை சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றி சேர்ந்து வரும் போது தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.


பழம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுக்கலாம். ஓரங்கள் பிடித்தால் மேலும் கொஞ்சம் நெய் சேர்த்து கிளறவும்.

மேலும் சில குறிப்புகள்