முருங்கைக்கீரை இனிப்பு அடை

தேதி: January 17, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - 1 கப்
ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
ஏலக்காய்ப்பொடி - 2 சிட்டிகை
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் - 1/4 கப்
நெய் - தேவையான அளவு


 

கேழ்வரகு மாவில், முருங்கைக்கீரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைந்ததும், சூடாக வடிகட்டி மாவில் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், வாழை இலையில் சிறிது நெய் தடவி பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்துத் தட்டிப் போட்டு நெய் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லாயிருந்தது மாமி.

பின்னூட்டத்திற்கு நன்றி.

அன்புடன்
ஜெயந்தி மாமி