புதினா கொத்தமல்லி பக்கோடா

தேதி: January 18, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - 1 கட்டு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு (சிறியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிள்காய் - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


 

புதினா, கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவில், அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சோம்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஜெ மாமி!
இன்று ஈவ்னிங் உங்க புதினா பக்கோடா செய்தேன். இதுவரை நான் புதினா சேர்த்து செய்ததில்லை. இதுவே முதல்முறை. நல்ல வாசனையா பக்கோடா இருந்தது. என் கணவர் விரும்பி சாப்பிட்டார். நன்றி!