அறுசுவை டாப்பர்ஸ்

என்னால் அறுசுவையின் மன்றத்து பகுதிகளில் சில பதிவுகளில் நுழைய இயலாததால் அறுசுவை சாதனையாளர்கள் அனைவருக்கும் தனிப் பதிவாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 400 என்ற இமாலய சாதனையை முதலில் தொட்ட சுபாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எத்த்னையோ அலுவல்களுக்கு இடையேயும் 400 குறிப்புகளை கொடுத்த செல்வி மேடத்திற்கு எனது வாழ்த்துக்கள். அறுசுவையில் எல்லா துறைகளிலும் கலக்கும் மனோஹரி மேடத்திற்கு எனது ஸ்பெஷல் வாழ்த்துக்கள். குறுகிய நாட்களில் பல குறிப்புகளையும், அருமையான ஆலோசனைகளையும் அள்ளி வழங்கும் ஜலீலாவிற்கும், சரஸ்வதி மேடம் மற்றும் முத்துலக்ஷ்மி மேடத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல வெளிநாட்டு சமையலையும், நம் நாட்டு சமையலையும் மிகவும் எளிதான வகையில் எழுதிய கவிசிவாவிற்கு எனது வாழ்த்துக்கள். பல நாட்களாக வேலைப் பளுவினால் அறுசுவையில் பங்கேற்க இயலவில்லை. தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். தனித்தனியாக பதிவை தேடி பதில் போட இயலாததால் ஒரே பதிவில் வாழ்த்திவிடுகிறேன்.

அன்பு தேவா,
வேலைப்பளுக்கு நடுவிலும் வாழ்த்தியுள்ளது பாராட்டும் உன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளது. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனதருமை சகோதரிகள் செல்வி அக்கா மற்றும் சுபா,ஜலீலாக்கா ஆகியோர் பல நூறை தொட்டு சாதனை புறிந்துள்ளார்கள் எனக்கும் தேவாவைப்போல் உள் நுழைய்ய முடியவில்லை இந்த த்ரெட்டில் மட்டும் பதிலளி வந்தது ஆகவே இதன் வாயிலாக மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!மேலும் அஸ்மாவின் உடல் நிலை பற்றி உங்களுக்கு தெரிவித்தபின்பு மனோகரி அக்கா தனி த்ரெட் திறந்து அனைவரும் உங்கள் அன்பயும் ஆலோசனையையும் பிரார்த்தனையையும் தெரிவித்து இருந்தீர்கள் என்னால் அந்த பதிவுல் உள் நுழைவு செய்யமுடியவில்லை!அவர்களுடன் போனில் பேசியபிறகு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை!அப்புறம் அருசுவையை பார்வை இட முடியவில்லை,எல்லாவற்றுக்கும் அஸ்மாவே உங்களுக்கெல்லாம் அவர்கள் உடல் நிலை பற்றி இப்பொலுது கூறிவிட்டார்கள் நாம் எல்லோரும் அவர்களுக்காக இறவனிடத்தில் பிரார்த்திப்போம்!உங்கள் எல்லோருடைய்ய அன்பும் என்னை நெகிழ செய்தது! மற்றவைக்கு பின்பு
அடடா கவிசிவாவை மறந்துவிட்டேன்!உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிசிவா!

அன்பு ரஸியா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி ரஸியா,உங்க அன்பிற்க்கும் சகோதரி அஸ்மாவிடம் எனது செய்தியை கூறியமைக்கும் எனது மனமார்ந்த நன்றி.அவர்களின் பதிவைப் பார்த்தேன் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், எதற்க்கு இந்த பார்மாலிட்டீஸ் என்று கொஞ்சம் காரசாரமாக பதிலும் எழுதிவிட்டேன் என்னை கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில். உங்க பிஸியான நேரத்திலும் அடிக்கடி வந்து ஆஜராவதை பார்த்துவருகின்றேன். அதைப் போல் உங்க குறிப்புகளை படங்களுடன் காணவும் ஆவலாயுள்ளேன். உங்கள் குறிப்புகளுக்கு நானும் ஒரு விசிறி என்பதையும் மறக்க வேண்டாம்.நன்றி மீண்டும் சந்திப்போம்.

எப்படி இருக்கிறீர்கள் பேசி அதிக நாள் ஆகிவிட்டது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 400க்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்து அசத்துவிட்டீர்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் உங்கள் குறிப்புகளை பார்த்துதான் செய்வேன்
என் வீட்டில் நெட் கனெக்ஷ்ன் ஒரு மாததிற்கும் மேலாக இல்லை அதனால் தாமதவாழ்த்து எனக்கும் அந்த த்ரெட்களில் பதில் அளிக்க முடியவில்லை அதனால் அனைத்தையும் பார்வையிடுவதோடு சரி .....

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஹல்லோ தேவா என்னங்க, எப்படி இருக்கீங்க?உங்களோடும் பேசி அதிக நாட்களாகி விட்டது, சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் அனைவரும் செளக்கியமா? சாதனையாளர்களுக்கு வாழ்த்தைக் கூற "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்", என்பதற்க்கு இது தானா அர்த்தம்!!! இப்பத்தான் புரிந்தது.அறுசுவை டாப்பர்ஸ் லிஸ்ட்டில் என்னையும் சேர்த்து விட்டீர்களே இது நியாயமா?உங்க வாழ்த்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கமும் அளித்தது ரொம்ப நன்றிப்பா. இதனால் மீண்டும் குறிப்புகள் வழங்க முயற்ச்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அதுசரி... நாங்கெல்லாம் டாப்பர்ஸ் என்றால், அப்ப நீங்க என்னவாம்?என்னைப் பொருத்தவரை அறுசுவையை பார்வையிடுபவர் முதல் பங்களிப்புச் செய்பவர் வரை அனைவருமே கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான். (ஏன்டா இவள் பெயரை இதில் சேர்த்தேன் என்று கூறுவது என் காதில் விழுகின்றது, இதைப் படித்துவிட்டு நீங்க சிரிப்பதும் எனக்கு கேட்கின்றது.)

100 குறிப்புகளை கொடுத்துள்ள கவிசிவா &முத்துலெட்சுமி அவர்களுக்கும் விரைவில் 350தொடபோகும் ஜலீலாக்கா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

என்டே மனோஹரிச் சேச்சி...அன்னைக்கி பதில் அனுப்ப முடியாமல் போய் விட்டது...அதன் பின் மகளுக்கு இயர் இன்ஃபெக்ஷன் ஆகிவிட்டு இப்பொழுது தான் பழைய படி தேறியிருக்கிராள்..அப்பப்பா பிள்ளைகளுக்கு ஒன்னுன்னா நாம ஓன்னு உக்காந்து அழுவ வேண்டியது தான் என்ன சொல்ராங்கன்னும் புரியாது எதுக்கு அழுகராங்கன்னும் புரியாது..ஒரு வழியா சமாளிச்சுட்டேன்...இப்ப திரும்ப அழுகை " சினி " வேனுமாம்..அப்டின்னா என்னன்னு எனக்கும் புரீல ஆனால் கன்டிப்பா சினி வேனுமாம்..ஹஹஹா..உங்கள்ட இருந்தால் என் பொன்னுக்கு ஒன்னு அனுப்பி வெச்சுடுங்க..:-D
இப்பொழுது நல்ல ஹேப்பி மூடில் பழையபடி இருக்கிரீர்கள் என்று புரிகிறது..குறிப்புகளையும் வழஙுமாறு கேட்டுக் கொள்கிறேன்...இனியும் பேசுவோம் பிறகு சரியா..டேக் கேர்

தளிகா:-)

அருசுவை தோழிகளைகளை அழகாக்கும் தேவ சேனாதிபதி,
அருமை சகோதரிகள் ரஸியா மற்றும் ஜுலைகா ஞாபகம் வைத்து வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி.

யாருடனும் பேசமுடியவில்லை
செல்வி மேடம்,தளிகா,குடு குடு மர்லியா, கவிதை கண்ணம்மா,கவிசிவா,சுஜி, சிங்கப்பூர் குயின்,ராதா, சிலஜா,மனோ மேடம்,சரஸ்வதி மேடம்,மனோகரி மேடம்வானதி,விமலா, மாலதி யெக்காவ்,இன்னும் யாரை விட்டேன் என்று தெரிய வில்லை
செய்ய்யது கதிஜா மற்றும் அஸ்மா எலாம் நலமா இருக்கீங்களா.
தம்பி செந்தில் எப்படி இருக்கீங்க.

பாபு தம்பி,பாப்பி என்னப்பா இன்னும் அருசுவையில் ஈடுபடவில்லை.
திறந்தாலே எரர் தான் கழ்ட பட்டு இவ்வளவு டைப் பன்னேன் ஒகே ஆகனும்.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஹலோ தளிகா.... குட்டி தளிகாவுக்கு இப்ப எப்படி இருக்கிறது பாவம்... காது வலியை சொல்லத்தெரியாமல் சிரமப்பட்டிருக்கும். இவ்வளவு நாட்கள் சரியாக சாப்பிடாமல் இளைத்துப்போயிருக்கும். பசிக்கிறது போலும். சாப்பிட ஏதாவது கேட்கிறாளோ 'சினி ' யை கொடுத்துவிடுங்கள்.

மேலும் சில பதிவுகள்