எல்லோரும் நலமா ?

அன்பு தோழிகளே,

எல்லோரும் நலமாக இருக்கீங்களா ? என்னடா இது, திடீர்னு ஒது பதிவுன்னு பாக்குறீங்களா? ஒன்னுமில்ல. கொஞ்சம் இல்ல நிறையவே பிஸியா இருக்கேன். அதான் அறுசுவை மட்டும் இல்ல, யாருக்கும் மெயில் அனுப்பவும் முடியல. என்னோட நிலமைய, ஒவ்வொருத்தரா மெயில் பண்ண நேரமில்ல. அதான், இங்க ஒரு பதிவு போட்டுட்டு போயிடறேன் :-) யாரும் கோவிச்சுக்காதீங்க. அடுத்த வாரம், ஒரு நல்ல சேதி வந்தவுடன மெயில் மழை பொழியறேன் :-)

ரொம்ப படிக்கவேண்டி இருக்கு. இத்தனை நாளா விளையாட்டா இருந்த்ததோட பலன் இப்ப தான் தெரியுது. சில மனக்கஷ்டங்க்களும் சேர்ந்த்துட்டு இன்னும் கவலையா இருக்கு :-(. அதனால, எதுலயும், ஈடுபாடோட இருக்க முடியல. அறுசுவைய தினமும், ஒரு முறையேனும் பாக்க வந்துடுவேன். யாருக்கு பிறந்தநாள் இன்னைக்குன்னு பாக்க.

அஸ்மா, உங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னு படிச்சதும் ரொம்ப வருத்தமா இருந்தது. பதில் குடுக்க வந்தா, அன்னைக்கு பதில் குடுக்க அறுசுவை விடல:-( அதனால குடுக்காம போயிட்டேன். உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும்.

விதுபா, நீங்க வருத்தப்படறிங்க. அதேப்போல தான் நாங்களும் வருத்தப்படறோம், அப்ப நடந்தவைகளை நினைத்து :-(. இன்னொன்னு, பாபு அண்ணா, எல்லோரையும் விட ரொம்ப வருத்தப்பட்டார். அவரோட நிலைமைல இருந்து பாத்தா, உனக்கும் புரியும் :-(. இதனால, உன்னோட யாரும் பேச விரும்பலன்னு கிடையாது. எல்லோருக்கும், அதே போல மன வருத்தம் இருந்தது தான் காரணம். உண்மைய சொல்லனும்னா, உன்ன எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். நீ அறுசுவைல எழுதின பல விஷயங்கள் எங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. உங்க குழந்தைக்களுக்கு, என் அன்பு முத்தங்கள் :-) வாங்க, திரும்பவும், நல்ல கவிதைகள் தாங்க :-)

...

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ரொம்ப நாலாச்சு எல்லாரையும் பார்த்து பேசி. எப்படி இருக்கீங்க?

ஒவ்வொருத்தரா விசாரிச்சு எழுத கூட நேரம் இல்ல. அதான் அவசரத்தில் அடிச்சிட்டு இருக்கேன்.

அப்புறம் வந்து பொருமையா அடிக்கறேன், பெரிய பதிவை :-)

பை பை :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்