தாளிக்கும் வடகம்

தேதி: January 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சின்ன வெங்காயம் - ஒரு கிலோ
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு டம்ளர்
கடுகு - 100 கிராம்
சோம்பு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
முழு பூண்டு - 5
விரளி மஞ்சள் - ஒன்று (அல்லது ) மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கப்
விளக்கெண்ணெய் - அரை கப்


 

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலையை நறுக்கவும்.
பூண்டு பல்லை தட்டி வைத்துக்கொள்ளவும். விரளிமஞ்சளை அம்மியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறிய உளுத்தம் பருப்பை பிழிந்துவிட்டு போடவும். நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, மற்றும் எல்லா சாமான்களையும் போட்டு பாதி அளவு விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டைகளை நல்ல வெயிலில் 2 நாட்கள் காய விடவும். 2 நாட்கள் கழித்து எடுத்து உருண்டைகளை உடைத்து உதிர்த்து விடவும்.
இதில் மீதி இருக்கும் விளக்கெண்ணெயை ஊற்றி பிசைந்து மறுபடியும் உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய விடவும். ஒரு வாரம் காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்தவும்.


இது தாளிப்பதற்காக செய்யப்படும் வடகம். இது கொஞ்சம் கஷ்டமான ப்ராஸஸ். இந்த வடகத்தை நல்ல வெயில் காலத்தில்தான் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் வீடுகளில் செய்வதை விட கடைகளில் வாங்கிக் கொள்கிறார்கள். எல்லா பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் தாளிக்கும் வடகம் என்று கேட்டால் கிடைக்கும். வெளிநாடுகளில்கூட இந்தியன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

மேலும் சில குறிப்புகள்


Comments

எனது பக்கத்து வீட்டு ஸ்னேகிதி ஆந்திராவில் இருந்து அவர் அம்மா செய்து அனுப்பும் குழம்பு வடகம் தருவார்.அதனைப்போட்டு தாளித்தால் வாசனையாக இருக்கும்.ஆனால் என்னென்ன பொருட்கள் தேவை என்று தெரியாது.நான் தேடிக்கொண்டிருந்த ரெஸிப்பி சென்னை வெயிலை வேஸ்ட் பண்ணாமல் கண்டிப்பாக இந்த வடகத்தை செய்து விடுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா..!! இந்த தாளிக்கும் வடகம் கைவசம் வைத்துக்கொண்டால் பலவகையான உணவையும் மணக்கசெய்து விடலாம். கூட்டு, பொரிச்ச குழம்பு, மீன்குழம்பு, மாங்காய் சாம்பார் இவற்றிற்கெல்லாம் கடைசியாக இறக்கி வைத்து கொஞ்சம் வடகம் தாளித்து போட்டால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். இந்த வடகத்தில் சட்னி கூட செய்யலாம். நன்றாக இருக்கும் அதுவும் என்னுடைய குறிப்பிலேயே இருக்கிறது. திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்கள் தாளிக்கும் வடககுழம்பு என்று ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார்கள் . அதுவும் செய்து பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க சாதிகா..!!