முக்கிய அறிவிப்பு (சந்தோசமான செய்திதான்:-))

அன்பு நேயர்களுக்கு,

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்விதமாக, தற்போது அதிகத்திறன் கொண்ட சர்வருக்கு அறுசுவையை மாற்றியுள்ளோம். அறுசுவைக்கு வருகை தரும் வருகையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் திறன் கொண்ட சர்வர்கள் தேவைப்படுகின்றது. இந்த சர்வரின் திறன் போதுமானதா என்பதை சில நாட்களுக்குப் பிறகுதான் முடிவு செய்ய இயலும். இது ஒரு பரிசோதனை முயற்சிதான். பிரச்சனைகள் எதுவும் இல்லையென்றால் இதிலேயே தொடரலாம். இல்லையெனில் மீண்டும் ஒரு சர்வர் மாற்றம் தேவைப்படும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்களில் அறுசுவையை கொண்டு வர வேண்டியிருக்கும்.

எதுவாய் இருந்தாலும் இனி பிரச்சனைகள் இன்றி அறுசுவை தொடர்ந்து கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருக்கின்றோம். கடந்த சில காலமாக இருந்த தேக்க நிலையை போக்கி, மீண்டும் அறுசுவையில் அதிகப்படியான உற்சாகத்தை கொண்டு வர இருக்கின்றோம். இதற்காக ஏராளமான திட்டங்கள் கைவசம் உள்ளது. அவற்றினை செயல்படுத்த உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

கடவுச்சொல் பிரச்சனை
********************

சர்வர் லோடினை தவிர்க்க அறுசுவையின் மெயில் சர்வரை சில வாரங்களுக்கு முன்பே நிறுத்தியிருந்தோம். அதைப் பற்றி மன்றத்தில் ஏற்கனவே ஒரு பதிவு கொடுத்திருந்தோம். இதனால், புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு கடவுச்சொல் வந்து சேராது என்பதையும் தெரிவித்து இருந்தோம். இடைப்பட்ட காலத்தில் பெயர்ப்பதிவு செய்த ஏராளமான உறுப்பினர்கள் தங்களுக்கு கடவுச்சொல் வந்து சேரவில்லை என்பதை தெரிவித்து இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் விரைவில் புதிய கடவுச்சொல் அனுப்பி வைக்கின்றோம். கடந்த ஒரு மாத காலத்தில் பெயர்ப்பதிவு செய்த அனைவருக்கும் புதிய கடவுச்சொல் அனுப்பி வைக்கின்றோம். கவலை வேண்டாம். இயன்றால் கடவுச்சொல் தேவைப்படுவோர், தாங்கள் பதிவு செய்த பெயரினையும், தங்களின் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டு arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

கூட்டாஞ்சோறு குறிப்புகள்
***********************

கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவதற்கும் நிறைய உறுப்பினர்கள் ஆர்வம் தெரிவித்து, மாதிரிக் குறிப்புகளை அனுப்பி இருக்கின்றார்கள். இதுவரை எங்கள் பக்கமிருந்து எந்த தகவலும் இல்லையே என்ற கவலை வேண்டாம். அவர்கள் பெயர்கள் விரைவில் கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்க்கப்பட்டு, குறிப்புகள் சேர்ப்பது எப்படி என்ற விளக்கமும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். குறிப்புகள் அனுப்பியவர்களில் சிலர் பெயர்ப்பதிவு செய்திருக்கவில்லை. அவர்கள் தயவுசெய்து பெயர்ப்பதிவு செய்யவும். இனி பெயர்ப்பதிவு செய்பவர்களுக்கு உடனடியாக கடவுச்சொல் வந்து சேரும். ஏற்கனவே பெயர்ப்பதிவு செய்து கடவுச்சொல் வந்து சேராதவர்கள், மீண்டும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டாம். பெயரினைக் குறிப்பிட்டு கடவுச்சொல் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதுமானது.

புதிய சேர்க்கைகளை அறுசுவையில் கொண்டுவர கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். அறுசுவை முகப்பு பக்கத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அறுசுவை முழுவதையும் சற்று மாற்றியமைக்கவுள்ளோம். நீண்ட நாட்களாக சொல்லி வந்த அறுசுவை ஆங்கிலத் தளம் இந்த மாத இறுதிக்குள் எப்படியும் வந்துவிடும் (இந்த சர்வர் ஒத்துழைத்தால்). குறிப்புகள் சேர்ப்பதிலோ, பதிவுகள் கொடுப்பதிலோ ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடன் தெரிவிக்கவும்.

சர்வர் லோடினை குறைக்க நீங்களும் எங்களுக்கு உதவிடலாம். முன்பே குறிப்பிட்ட ஒன்றை மீண்டும் உதாரணமாக குறிப்பிடுகின்றோம். பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும்போது, பாராட்டியவர்கள் ஒவ்வொருவருக்கும் தயவுசெய்து தனித்தனியே ஒரு பதிவு கொடுக்காதீர்கள். ஒரே பதிவில் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துவிடுங்கள். இது நிறைய வகையில் உதவிடும். அதேபோல் குறிப்புகள் கொடுப்போர், ஏற்கனவே அறுசுவையில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை மீண்டும் கொடுக்காதீர்கள். கூட்டாஞ்சோறு குறிப்புகள் பற்றி விரிவாக நிறைய எழுத வேண்டியுள்ளது. அதற்கென ஒரு தனிப்பதிவு கொண்டு வருகின்றோம்.

இனி வழக்கம்போல் உங்கள் பங்களிப்பை தொடரலாம்.

உண்மையில் இது எல்லாருக்குமே சந்தோஷமான செய்திதான் அறுசுவையை இப்பொழுதுதான் பார்த்தேன் மாற்றங்களை பார்த்ததும் சந்தோஷம் அதுவும் அறுசுவை உடனுக்குடன் கிடைப்பது மிக மிக சந்தோஷம் அறுசுவையில் இனி எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும் எப்பொழுதும் போல அறுசுவையை நாங்கள் பார்வையிடவும் எங்களுக்காக மிகவும் தீவிரமாக முயற்ச்சி செய்த அண்ணாவிற்ற்க்கு பாராட்டுக்கள். மென் மேலும் அறுசுவை வளர்ச்சி அடையவும் அதில் உங்கள் பணி தொடரவும் மீண்டும் வாழ்த்துகிறேன்.

அன்புடன் கதீஜா.

சகோதரிகளுக்கு நன்றி.

ஒரு பெரிய சண்டைக்கு பிறகு இன்று DNS IPs மாற்றிவிட்டார்கள். புதிய சர்வர் பணியாற்ற தொடங்கிவிட்டது. இருப்பினும் இன்னும் சில fine tune works இருக்கின்றது. அதன்பிறகுதான் இந்த சர்வரின் திறனை அறியமுடியும். நான் தற்போது வெளியூரில் இருப்பதால் என்னால் சரிசெய்ய முடியவில்லை. திங்கட்கிழமை சரி செய்கின்றேன். இப்போது அதிக வருகையாளர்கள் வருகை தருவதால், பல நேரங்களில் "user has already more than 'max_user_connections' active connections" என்பது போன்ற error message தோன்றி, பக்கங்களை பார்வையிட முடியாது போகும். அது தற்காலிக பிரச்சனைதான். நீங்கள் சிறிது நேரம் கழித்து refresh செய்தால் பக்கம் மறுபடியும் கிடைக்கும்.

குறிப்புகள், பதிவுகள் கொடுப்போர் கவனத்திற்கு. நீங்கள் டைப் செய்யும் எதையும் ஒரு நோட்பேடில் காப்பி செய்து வைத்துக்கொண்டு பிறகு submit செய்யுங்கள். இந்த பிரச்சனையால் நீங்கள் டைப் செய்தது பதிவாகாமல் போக நேரிடலாம். எனவே எப்போதும் எதையும் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டு பிறகு பதிவு செய்யுங்கள்.

மீண்டும் திங்கட்கிழமை வருகின்றேன். நன்றி.

அன்பு தம்பி பாபுவுக்கு வாழ்த்துக்கள். புத்தம் புது பொழிவுடன் அறுசுவை களை கட்டியுள்ளது. இந்த மாற்றங்களுக்குத் தான் நாங்களும் காத்துக்கொண்டிருந்தோம். அறுசுவையில் பங்கேற்கும் எங்களுக்கே இதுவரையிருந்த ப்ரச்னைகள் பெரும் கவலையாக இருந்த போது அறுசுவையை கட்டி காக்கும் உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்துள்ளோம். போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே என அல்லும் பகலும் அறுசுவைக்காக உழைக்கும் உங்களின் உழைப்பு வீணாகாது. இனிமேலாவது கொஞ்சம் உடம்பை கவனியுங்கள். அறுசுவை மேன்மேலும் வளரவும், புது புது மாற்றங்களுடனும் பொழிவுடனும் விளங்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ellarukum vanakkam, naan entha site nirayanala parthukittu varen.this is one of my favourite site also.but i registered two days back only.but i couldnt get password because of the server problem i think so.today only i get my password.can anyone help me how to type in tamil.i want to share many things with u all friends.shall i join with u? sorry admin i dont know where to give my words. so that only i typed here. WISH U ALL SUCCESS ADMIN.

கீழ எழுத்துதவின்னு இருக்கேற் அங்க போஇ படிச்சு பாருங்க புரியும்..அப்ரம் நாளை முதல் தமிழில்..முதலில் அய்யோன்னு இருக்கும்..கை வலிக்கும்.
ஆனால் அதோடு நிறுத்திவிட்டு சாரி அட்மின் ந்னு சொல்லி தங்லீஷுக்கு வராமல் விடாமல் டைப் பன்னுங்க.1 மாதத்தில் சுலபமாயிடும்..அப்ரமென்ன தூக்கத்தில் கூட அந்தரத்தில் கைய்யை வெச்ஹு அறுசுவைகு கனவில் பதிவு போடற மாதிரியே வரும்

நன்ரி.இந்த தள்த்தை அதிக நான் பார்க்கிறேன்.உங்கள் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப ச்பொர்டிவ இருக்கு.நாமும் எதாவது பன்னனும்மு தினமும் ஒரு பயனுல்ல குறிப்பு கொடுக்கலாம்னு இருக்கேன்.இப்படியே இங்கேயே கொடுக்கலாமா? நான் டைப் பன்னி முடிக்கயில ரோம்ப டைம் ஆகுது. கீழ நான் ஆங்கிலத்தில் டைப் பன்னிட்டு மேல பாத்தா வேற மாதிரி வருது. முயற்சி திருவினையாகும் சீக்கிரம் கத்துக்குரேன்.

..மற்றவர்களுக்கு பயனளிக்கும் குறிப்ப்புன்னா உங்களை விடவே கூடாது கன்டிப்பா வாங்க.
மன்றத்தில் பல த்ரெட்டும் இருக்கும்...இல்ல புதுச தொடங்குங்க ஒரு த்ரெட் அதில் உங்கள் குறிப்பு அனுப்புங்க.

உண்மையில் இது எல்லாருக்குமே சந்தோஷமான செய்திதான் அறுசுவையை நாமும் புதிது புதிதாக செய்து சுவைப்பது. இது எல்லோருக்கும் பயன் படும் தளமாக அமைந்துள்ளன.
நம் சந்ததியோடு முடிந்து விடாது எப்பவும் தொடர்ந்து இருக்க வேண்டும் வளர்ந்து வரும் சந்ததியினருக்காக. என்று இறைவணை வேண்டுகின்றேன்
இதை நல்ல முறையில் கொண்டுசெல்லும் சகோதரருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்போடு
பா.ராகினி.

மேலும் சில பதிவுகள்