என்னவென்று தெரியவில்லை

வணக்கம் ,

நான் custard powder பற்றி கேள்விபட்டேன், ஆனால் எனக்கு என்னவென்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கலேன்.

அனு.

அனு கஸ்டர்ட் பவுடர் என்பது வெறும் கார்ன் ஃப்லார் கொண்டு செய்து அதற்கு மணத்திற்கு வெவ்வேறு ஃப்லேவர்ஸ் இட்டு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
பொதுவாக எல்லோரும் அதில் விரும்புவது வனிலா ஃப்லேவர்..
அது கேக் மிக்ஸ்,எசென்ஸ் இது போன்ற பொருட்கள் இருக்குமிடத்தில் கானலாம்..
அதிலேயே எப்படி செய்வதென்று எழுதியிருக்கும்....
2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை பாலில் கரைத்துக் கொண்டு 1/2 லிட்டெர் பாலை சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து அதில் கரைத்த கஸ்டர்டை சேர்த்து ஒரு கிளறு மட்டும் கிளறி அனைத்து விட வேண்டும்..இல்லையென்றால் மாவு அதிக வெந்து அப்பம் போல் ஆகிவிடும்..
பின் அதௌ சூடாறியதும் குளிர்விக்க ஃப்ரிட்ஜில் வைக்கவும்..
பின் ஆப்பில்,க்ரேப்ஸ்,பப்பாளி,மாங்காய் ஜெல்லி போன்ற உங்கள் விருப்பம் போல் இவற்றை பொடியாக நறுக்கி கஸ்டர்டுடன் கலந்து ஐஸ் க்ரீம் சேர்வ் செய்யும் பவுளில் இட்டு பரிமாறும் சமயத்தில் ஒரு ஸ்கூப் வனிலா ஐஸ்க்ரீம் இட்டு ஒரு கலக்கு கலக்கி பரிமாறலாம்.
மிகவும் சுவையான மிகமிக சுலபமான ஒரு ஐடெம் இது.

தளிகா:-)

நன்றி தளிகா. செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்