தினமும் ஒரு கீரை

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.ரொம்ப நாட்களாக உங்கள் அனைவருக்கும் உதவ கூடிய ஏதாவது ஒரு குறிப்பை தரவேண்டும் என்று ஆசைப் பட்டேன்.அந்த ஆசை இன்று தான் நிறைவேறியது. ஆனந்த விகடனில் வாரா வாரம் தினமும் ஒரு கீரை என்ற கட்டுரையாக வருவதிலிருந்து எடுத்து உங்களுக்காக கொடுத்துள்ளேன்.அனைவரும் படித்து பயனடையுங்கள்.தினமும் ஒரு கீரையை பற்றிய குறிப்பை சேர்க்கிறேன்

1.வெந்தயக் கீரை
வெந்தய செடியின் இலைகள் தான் வெந்தயக் கீரை.இது மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.இதை பொரியலாகவும்,பருப்புடன் சேர்த்து சாம்பாராகவும்,கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம்.
இந்த கீரையில் நீர்ச் சத்தும்,புரதமும்,மற்றும் மாவுச் சத்து,நார்ச் சத்து,தாது உப்புக்கள் ஆகியனவும் அடங்கியுள்ளன.உயிர்ச் சத்துகளாகிய வைட்டமின் ஏ,வைட்டமின் சி,சுண்ணாம்புச் சத்து,இரும்புச் சத்து ஆகியனவும் உள்ளன.
புரதமும்,இரும்புச் சத்தும் அதிக அளவிலும்,கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பதால்,வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான் கீரை இது.குளிர்ச்சியை கொடுக்கின்ற கீரை என்பதால்,தினமும் இரவில் கண்விழித்து வெலை செய்பவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயக் கீரை தாகத்தை அடக்கி,நா வறட்சியைப் போக்கும்.இருமலைக் குணமாக்கும்.கண் பார்வையைத் தெளிவாக்கும்.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.இதனால் நல்ல பசியும் எடுக்கும்.
இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் ருசியின்மை,பசியின்மை,வாத நோய்,மேக நோய்,மூலம்,கபம்,உடல் நலிவு,தொண்டைப்புண்,இருமல்,தலைச்சு ற்றல்,கண் பார்வைக் கோளாறுகள்,குடல்புண் போன்ற நோய்களை அணுக விடாமல் தடுக்கலாம்.வாய்ப்புண்,தொண்டைப்புண் உள்ளாவர்கள் வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர குணமாகும்.

2. அரைக் கீரை
அரைக் கீரையில் இரும்புச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.பத்திய வகை உணவுக்குத் தோதான கீரை இது.சீதளத்தைத் தடுக்கும்.பலவீனத்தைப் போக்கும்.இந்தக் கீரையைப் பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவிவிட்டு,உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அரைக் கீரையில் வைட்டமின் ஏ,சி இரண்டும் அதிக அளவில் இருக்கின்றன.புரதச் சத்து,சுண்ணாம்புச் சத்து,நார்ச் சத்துக்களுக்கும் குறைவில்லை.
இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும்.தேக பலமும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.மலச்சிக்கலை போக்கி குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்.இதயத்திற்கு வலிமையை தரும்.
உடல் நலக் குறைவினால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை கடைந்தும்,மிளகு ரசத்தையும் உணவில் சேர்த்து கொண்டால் சத்தான உணவாகும்
அரைக்கீரையோடு மிளகு,பூண்டு,பெருங்காயம்,இஞ்சி,வெங்காயம் சேர்த்து உப்பிட்டுக் கடைந்து,சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு ஊட்டலாம்.இப்படிச் சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும்
பசியை உண்டாக்குவதும்,நுரை ஈரல் வியாதியை குணமாக்குவதும்,வாதம்,பித்தம்,வாய்வு போன்றவற்றை தடுப்பதும் இந்த கீரையின் இயல்பாகும்.நரம்பு தளர்ச்சியையும் போக்குகிறது.சளி,இருமல்,கபம் உள்ளவர்கள் இந்த கீரையுடன் துவரம் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம்,வெங்காயம்,பூண்டு போன்றவற்றை சேர்த்துகொள்ளலாம்.
இதனை சாம்பாராகவும் வைப்பர்.இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு,மிளகு,இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில்,ரசம் வைத்தும் சாப்பிடலாம்.
நோயற்ற வாழ்விற்கு நாடுவோம் அரைக் கீரை.

அனைவரும் கீரையின் மகத்துவம் அறிந்து தினமும் அன்றாட உணவில் ஒரு கீரை என சேர்த்து பயன் பெறுங்கள்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அன்புடன் தீபா

அறுசுவை தோழிகளே எனக்கு வந்த மெயிலை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இங்கு பதிவு செய்தேன். தமிழில் மொழி பெயர்பதற்கு நேரமில்லை அதனால அப்படியே ஆங்கிலத்தில் பதிகிறேன். மன்னித்துக் கொள்ளவும். படங்களையும் கொடுக்க முடியவில்லை.

One of Signatures' was astoundingly correct. It now contends that every whole food has a pattern that resembles a body organ or physiological function and that this pattern acts as a signal or sign as to the benefit the food provides the eater. Here is just a short list of examples of Whole Food Signatures.

A sliced Carrot looks like the human eye. The pupil, iris and radiating lines look just like the human eye...and science shows that carrots greatly enhance blood flow to and function of the eyes.

A Tomato has four chambers and is red. The heart is red and has four chambers. All of the research shows tomatoes are indeed pure heart and blood food.

Grapes hang in a cluster that has the shape of the heart. Each grape looks like a blood cell and all of the research today shows that grapes are also profound heart and blood vitalizing food.

A Walnut looks like a little brain, a left and right hemisphere, upper cerebrums and lower cerebellums. Even the wrinkles or folds are on the nut just like the neo-cortex. We now know that walnuts help develop over 3 dozen neuron-transmitters for brain function.

Kidney Beans actually heal and help maintain kidney function and yes, they look exactly like the human kidneys.

Celery, Bok Choy, Rhubarb and more look just like bones. These foods specifically target bone strength. Bones are 23% sodium and these foods are 23% sodium. If you don't have enough sodium in your diet the body pulls it from the bones, making them weak. These foods replenish the skeletal needs of the body.

Eggplant, Avocadoes and Pears target the health and function of the womb and cervix of the female - they look just like these organs. Today's research shows that when a woman eats 1 avocado a week, it balances hormones, sheds unwanted birth weight and prevents cervical cancers. And how profound is this? .... It takes exactly 9 months to grow an avocado from blossom to ripened fruit. There are over 14,000 photolytic chemical constituents of nutrition in each one of these foods (modern science has only studied and named about 141 of them).

Figs are full of seeds and hang in twos when they grow. Figs increase the motility of male sperm and increase the numbers of sperm as well to overcom e male sterility.

Sweet Potatoes look like the pancreas and actually balance the glycemic index of diabetics.

Olives assist the health and function of the ovaries.

Grapefruits, Oranges, and other citrus f ruits look just like the mammary glands of the female and actually assist the health of the breasts and the movement of lymph in and out of the breasts.

Onions look like body cells. Today's research shows that onions help clear waste materials from all of the body cells They even produce tears which wash the epithelial layers of the eyes.

'The news isn't that fruits and vegetables are good for you, it's that they are so good for you, they can save your life .' David Bjerklie , TIME Magazine, Oct. 2003

ஹாய் தீபா, நல்ல தகவல்கள் சொல்லியுள்ளீர்கள். அரைக்கீரை, வெந்தயக்கீரையைப் போல மணத்தக்காளிக் கீரையும் உடலுக்கு ரொம்ப நல்லது.
இந்த கீரையை பற்றிய சில நன்மைகள். இந்த கீரையின் வேர், காய், தண்டு, இலை இப்படி அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இதைபொரியலாகவும், கூட்டு, குழம்பு, ஊறுகாய், கறி எதுவாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.இக்கீரையின் எல்லா பகுதிகளுமே சமைத்துண்ண ஏற்றது. இக்கீரையின் மருத்துவ பயன்கள்:
1. மஞ்சள் காமாலை நோய் கண்டவர்கள் பாலுடன் இந்த கீரையின் சாறை சேர்த்து குடித்து வந்தால் நோய் எளிதில் கட்டுப்படும்.
2. வாய்ப்புண், வயிற்றில் உள்ள புண் ஆகியவை குணமாகும்.
3. இந்த கீரையுடன் சீரகம், மிளகு சேர்த்து துவையல் போல் அரைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கும்.
4. சிலருக்கு இறுக்கமான ஆடைகள் அணிவதினாலோ அல்லது அக்குல் போன்ற இடங்களில் தேமல் அல்லது அரிப்பு ஏற்படும். அதற்கு இந்த மணத்தக்காளி கீரையின் சாறை பிழிந்து தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தேமல் மறையும்.
5. தொப்பையை குறைக்கும், குடலில் உள்ள புழுக்களை அழிக்கும்.

நன்றி

பிரதிபாலா.தீபா, ஜானகி ரொம்ப சூப்பர்,
எப்படிப்பா இப்புடியேல்லாம் கலக்குரீங்க
ஒகே வெரி குட் நூரு மார்க்
ஹி ஹி ஹி ஹ ஹா ஹா

ஜலீலா

Jaleelakamal

நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களும் அறிது பயன் பெறட்டுமே என்ற நல்லெண்ணம் மட்டுமே மேடம்.

3.சுக்காங் கீரை
சுக்காங் கீரை தானே விளையும் கீரையாகும்.சொக்கான் கீரை என்பது மருவி,சுக்காங்கீரை ஆகிவிட்டது.இதில் உள்ள ஆக்ஸலேட் எனும் சத்துப் பொருள்,உடம்பில் விஷங்களைக் குறைக்கும் ஆற்றல்கொண்டது.இந்தக் கீரையில் அதிக அளவு நீரும் புரதம்,கொழுப்பு,தாதுப் பொருட்கள்,மாவுப் பொருட்கள்,நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன்.இந்த கீரை நமக்கு 15 கலோரி எரிபொருளைக் கொடுக்கிறது.
கீரையின் இலை,தண்டுகளை உணவாக உட்கொள்ளலாம்.சாம்பார்,பருப்புடன் சேர்த்து கூட்டு,துவையல்,சட்னி என சமைத்து உண்ணலாம்.100 கிராம் சுக்காங்கீரையில் 63மி.கி சுண்ணாம்புச் சத்தும்,87மி.கி இரும்புச் சத்தும் இருக்கின்றன்.வைட்டமின் ஏ,சி ஆகியவை 12மி.கி உள்ளன்.இவை உடலில் உள்ள அசுத்த ரத்தத்தைச் சுத்திகரித்து,இதயத்துக்கு வலுவூட்டக்கூடியது.
பசியைத் தூண்டிவிடுவது இந்தக் கீரையின் இயல்பு.எனவே,வளரும் குழந்தைகளுக்கு இந்தகீரை சிறந்த சத்துணவாக அமைகிறது.வாய்வுத் தொல்லை,நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.மலச்சிக்கலுக்கும் சிறந்த மருந்தாகும்.குடல்சம்பந்தப் பட்ட நோய்களைத் தடுக்கும்.உடலுக்கு வலுவைத் தரும் சுக்காங்கீரைக்குப் பித்தத்தைப் போக்கும் ஆற்றலும் உண்டு.உடலில் ஏற்படும் தேவையற்ற சதை வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது இந்தகீரை .
சுக்காங்கீரையின் சாறு,பல் வலியைப் போக்கும்.இதன் வேரைக்கொண்டு பல் துலக்க பல்,ஈறுதொடர்பான தொல்லைகள் மட்டுப்படும்.விஷக் கடிக்கு சுக்காங் கீரையின் விதையை அரைத்து கடிவாயில் தேய்துவிட்டால் விஷம் சீக்கிரம் இறங்கும்.
இவ்வளவு மருத்துவப் பயன்களை உடைய சுக்காங்கீரையை வளரும் குழந்தைகளுக்கு,வாரம் ஒருமுறை யாவது கொடுத்து வந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்.
4.வல்லாரைக் கீரை
நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் கீரை இது.வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை என்று பெயர் பெற்றது.வல்லாரைக்கு சரஸ்வதி கீரை என்ற பேரும் உண்டு.சித்த மருத்துவம் இதனை லேகியம்,சூரணம்,மாத்திரை போன்ற வடிவங்களில் பயன்படுத்துகிறது.
வல்லாரை ரத்தத்தைச் சுத்திகரித்து,ரணங்களை ஆற்றும்.தொண்டைக்கட்டு,ஜூரம்,பலவீனம்,பல் நோய்,பசி,தாகம்,படை போன்றவற்றைக் குணப்படுத்தும்.பொதுவான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது வல்லரை.ஞாபக சக்திக்கு இதை விடச் சிறந்த மருந்து வேறு இலை.
இந்தக் கீரையில் இரும்புச் ச்த்து,சுண்ணாம்புச் சத்து,வைட்டமின் ஏ,சி சத்துக்கள்,தாது உப்புக்கள் ஏராளமாக உள்ளன்.வல்லாரை இலையால் பல் தேய்த்தால்,பறகளில் ஏற்பட்ட மஞ்சள் கரை நீங்கும்.
மற்ற கீரைகளைப் போலவே இந்தக் கீரையையும் சமைத்து உண்ணலாம்.ரத்தத்துக்கு வேண்டிய சரிவிகிதச் சத்துக்களைக் கொடுக்க வல்லது வல்லாரை.
வல்லாரைக் கீரையை தினம் ஒருகைப் பிடி அளவு எடுத்து அரைத்ஹு,வாயில் போட்டுப் பசும்பால் குடித்து வந்தால்,மாலைக் கண் பாதிப்பு படிப்படியாக அகலும்.வல்லாரைக் கீரையையும் மிளகையும் செர்துப் பச்சையாக் மென்று தின்று வந்தால்,உடல் சூடு தணியும்.
இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்தும்போது அசைவ உணவு,அகத்திகீரை,பாகறகாய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.புளி,காரம் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.வள்ரும் பருவத்தினர் காலை வேளைகளில் இதைப் பச்சையாக் மென்று தின்று வந்தால்,மூளை பலம் பெறும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு வல்லாரைகீரையை அடிக்கடி உணவில் கொடுத்து வர வளர்ச்சி கூடுதலாகும்
5.புதினாக்கீரை
நிறைய ஊட்டச்சத்துடன்,காரமும் மணமும் கொண்டது புதினாக் கீரை.இதில் இரும்புச் சத்து,சுண்ணாம்புச் சத்து,புரதம்,கந்தகம்,தாது உப்புகள்,ஆக்ஸாலிக் அமிலம்,க்ளோரின் போன்றவையும்,வைட்டமின் ஏ,சி,தயாமின்,ஹைப்போஃப்ளேவின்,நிகோடினிக் அமிலம்,நார்ச் சத்துக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன.புதினாக் கீரையின் இலை,தண்டு,விதை,வேர் என எல்லாப் பொருட்களுமே மருத்துவப் பயன்பாடு கொண்டவை.
இரைப்பைக்கு வலு கொடுக்கக் கூடியது புதினா.வாயுத் தொல்லைக்குச் சிறந்த நிவாரணி.வயிற்று வலி,நரம்புத் தளர்ச்சி,சிறுநீரகக் கோளாறுகள்.அஜீரணம்,பசியின்மை,பல்கூச்சம் போன்றவற்றைப் போக்கும்.
அஜீரணம்,ஜூரம் உள்ளவர்கள் புதுனா இஅலியை நீரில் ஊறவைத்ஹ்டு,தொடர்ந்து குடிக்கலாம்.புதினாவுடன் இஞ்சி,மிளகு,சீரகம் சேர்த்துக் காய்ச்சி அருந்த வாந்தி நிறகும்.கை,கால் எரிச்சலுக்குப் புதினாவுடன் உப்பு சேர்த்து சூடு பறக்க ஒத்தடம் கொடுக்கலாம்.புதினாச் சாற்றை நெற்றியில் தடவ,தலைவலி மட்டுப்படும்.இந்தக் கீரையின் எண்ணையைத் தலைவலித் தைலம் செய்ய உபயோகிக்கிறார்கள்.
புதினா இலைச் சாறு,எலுமிச்சம் பழச் சாறு இவற்றோடு பனங்கற்கண்டு சேர்த்து சர்பத்தாகக் காய்ச்சிக் குடிக்கலாம்.புதினா,உடல் உஷ்ணத்தைத் தூண்டக்கூடியது என்பதால் மூலநோய் உள்ளாவர்கள் மட்டும் புதினாவிடமிருந்து ஒதிங்கிகொள்ளுங்கள்
6.
சிறுகீரை

சிண்டுக்கீரை இனத் தைச் சேர்ந்தது சிறுகீரை. இதன் தண்டு பெரிதாக நீண் டும், இலைகள் சிறிதாகவும்இருக் கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய கீரை இது.

இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச் சத்தும் மற்றும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. 100 கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல கீரை இது. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.

சிறுகீரையுடன் துவரம்பருப்பு, வெங் காயம், பெருங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்துத் தாளித்து சாம்பா ராகவும் செய்து சாப்பிடலாம்.

துவரம்பருப்பும் வெங்காயமும் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில்வதக் கிக் கடைந்து, தொடர்ச்சியாக ஒரு மண் டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.

பொதுவாக இந்தக் கீரை வாதநோய் களைத் தீர்க்கும் சக்தியுடையது. பித்த நோய்களைக் கட்டுப்படுத்தும்.விஷக்கடிகளையும், விஷக்கட்டிகளையும் போக்கும். கல்லீரலுக்கு வலிமையை உண்டாக்கும்.

சிறுகீரையை தினசரி சாப்பிட்டு வருபவர்களுக்கு தேள், சிலந்தி, பூரான், குளவி போன்றவற்றின் விஷங்களைக் கரைக்கும் சக்தி உண்டாகும்.

சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தருகிறது. ஆறாத ரணங்களைத் தீர்க்கிறது. கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது. ரத்த சோகையையும் நீக்கவல்லது இது.

இதை நம் வீடுகளில் சாதாரண தொட்டிகளிலேயே கூட வளர்க்கலாம். வாரம் ஒருமுறையாவது தவறாமல் இந்தக் கீரையை உண்டு, ஆரோக்கியம் பெறுவோம்!
7.பொன்னாங்கண்ணிக் கீரை

சாதாரணமாக பொன்னாங்கண்ணி யின் காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும் எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக் கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந் தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள். காரணம், இதில் வைட்டமின்ஏ இருப்பதால், அந்த அளவுக் குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும் வல்லமையைக் கொண்டது இது.

இதை வெவ்வேறு விதமாக உட்கொள் வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.

இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும். உடல் உஷ்ணம் குறையும். ரத்தம் விருத்தியாகும். இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு. இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்

8.புளிச்சக் கீரை

பெயருக்கு ஏற்றாற்போல் புளிப்புச் சுவையுள்ள இந்தக் கீரை, உடல் வலிமையைப் பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாகத் தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்தக் கீரையைச் சிறிதளவேனும் சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால், உடம்பு தேறுவார்கள். இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்தக் கீரையை 'கோங்குரா சட்னி'யாகச் செய்து, தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இந்தக் கீரையில் தாதுப் பொருள்களும், இரும்புச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. தவிர, விட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாதக் கோளாறுகளையும்

குணப்படுத்தும் வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு. சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள், இந்தக் கீரையைச் சட்னி செய்து, உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

காச நோயைக் குணமாக்கும் இந்தக் கீரை, ரத்தத்தைச் சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள், இந்தக் கீரையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. காரணம், புளிச்சக் கீரை பித்தத்தை அதிகப்படுத்தும் குணம் உடையது

9.
கொத்துமல்லிக் கீரை

கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும்போது இலவசமாகக் கொடுப்பதனாலேயே நமக்குக் கொத்துமல்லி, கறிவேப்பிலைகளின் மகத்துவம் அதிக அளவில் தெரிவதில்லை.

கொத்துமல்லியைத் துவையலாக அரைத்துச் சாதத்துடன் நல்லெண்ணெய்விட்டுச் சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். கொத்துமல்லித் துவையல் செய்யும்போது, புளியைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். இவற்றுடன் உளுந்தையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினால், இதன் மருத்துவ ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு துவையலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், ரத்த சம்பந்தமான நோய்கள் நெருங்கவே அஞ்சும் என்கிறது சித்த மருத்துவம்.

இந்தக் கீரையைக் காலை வேளையில் பல் துலக்கியதும், வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட்டு வர, வாய் துர்நாற்றம் விலகுவதுடன் பற்களும் ஈறுகளும் வலுப்பெற்று, பற்களில் எந்த நோயும் வராமல் பாதுகாக்கவும் செய்யும்.

காபி, டீ போன்றவற்றை ஒதுக்கிவிட்டு கொத்துமல்லி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்துப் பொடித்துப் பனைவெல்லம் சேர்த்து பானகம் தயாரித்துக் குடித்து வந்தால், உடலுக்கும் சோர்வுற்ற மூளைக்கும் புதிய தெம்பு பிறக்கும்.

கொத்துமல்லிக் கீரையில் வைட்டமின் பி-1, பி-2, சி ஆகிய சத்துக்களும், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்களும் உள்ளன. குறிப்பாக, வைட்டமின்-ஏ சத்து அதிக அளவில் இருக்கிறது. உடல் பாரம், கண் எரிச்சல், குடல் எரிச்சல் உள்ள வர்கள் கொத்துமல்லிக் கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் குணமாகும். வைட்டமின்-ஏ குறைவினால் ஏற்படும் சொறி, சிரங்கு, சரும நோய்கள் அகலும். இவை தவிர, நரம்புக் கோளாறுகளை நீக்கவும் இந்தக் கீரை பயன்படுகிறது
10.பசலைக் கீரை

ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் பசலைக் கீரைக்கு உண்டு. பருப்புடன் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின்சி, இரும்பு, சுண்ணாம்பு, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. பற்களும் எலும்புகளும் உறுதி பெற இந்தச் சத்துக்கள் அவசியம். புகைப்பவர்களின் உடலில் அழிந்துவரும் வைட்டமின்சி சத்துக்களை ஈடு செய்ய இந்தக் கீரையை அடிக்கடி உண்ணலாம். பசலையின் இளந் தளிர்களைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் உடல் உஷ்ணம் விலகி,கண் எரிச்சலும் உடல் எரிச்சலும் நீங்கும். நீர்க்கடுப்பு அகலும்.

சில பெண்கள் கர்ப்ப காலங்களில்மலச் சிக்கல் ஏற்பட்டு, நீர் பிரியாமல் கஷ்டப்படு வார்கள். அவர்கள் மருத்துவரின் ஆலோச னையுடன், பசலைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தவிர, கருவில் வளரும் குழந்தைக்கு கால்சியம், இரும்புச் சத்து இரண்டும் கிடைப்பதால், குழந்தை நல்ல உடல் நலத்துடன் பிறக்கும். பசலைக் கீரையையும், பிஞ்சு முருங்கைக் காயையும் உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தக் கீரை, ஒரு வரப்பிரசாதம்!

நீண்ட நாள் தலைவலியால் கஷ்டப்படுபவர்கள், பசலையின் சாறு எடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வந்தால், தீராத தலைவலியும் தீரும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றலும் இந்தக் கீரைக்கு உண்டு. நீர்க் கோவை, சளி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையின் சாற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல குணம் பெறலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் வேனிற் கட்டிகளில் சீழ் பிடித்து வேதனையை அனுபவிப்பவர்கள், இந்தக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் சுத்தமாக வெளிவந்துவிடும்.

பசலைக் கீரையோடு சின்ன வெங்கா யம் சேர்த்துச் சமைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புகைபிடிக்கும் எண்ணமே பூண்டோடு ஒழியும் என் கிறார்கள்!
11.மணத்தக்காளி

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகை-களில் மணத்தக்காளியும் ஒன்று.

அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி... மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம். பருப்-புடன் சேர்த்து கூட்டு வைக்க-லாம். பொரியலாகச் செய்தும் சாப்-பிடலாம். சாம்பார் செய்யும்-போதும் அதில் பயன்-படுத்தலாம். இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப் பிடிக்காத குழந்தை-களும் விரும்பிச் சாப்பிடுவார்-கள்.

மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு. இந்தக் கீரை-யில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்-கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படு-கிறது. இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு-வந்தால், உடல் சூடு குறையும். மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சித்த மருத்துவத்தில் குடல் புண்-களைக் குணப்படுத்துவதில் மணத்தக்-காளிக்கு முக்கிய இடம் உண்டு. காமாலை நோயாளிகளுக்கு இந்தக் கீரையை நன்றாக இடித்துச் சாறு எடுத்து, பசும்பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கும்போது ஒரு வாரத்திலேயே காமாலை நோய் சரியாகிவிடும்.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்-கின்றன. அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒருமுறை-யாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது!

12.கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணிக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு.
மஞ்சள் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி
கிடைப்பது அரிது.வெள்ளைப் பூக்கள் பூக்கும் கரிசலாங்கண்ணியைத்தான் அதிக அளவில் பயன்படுத்ஹ்டுகிறார்கள்.
இநதக் கீரையை பொரியல்,கடைதல்,கூட்டு,சட்னி என் அனைத்து வகையான வடிவத்திலும் உட்கொள்ளலாம்.கல்லீரல் கோளாறுகள்,மலச்சிக்கல் ஆகியவை நீங்கி ரத்தம் சுத்திகரிக்கப்பட இது நல்ல மருந்து ரத்தசோகை உள்ளவர்களுக்கு இந்தக்கீரை உண்மையிலேயே வரப்பிரசாதம்
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக உஅலர்த்தி இடித்துத் தூளாக்கி சுத்தமான துணியில் சலித்து எடுத்ஹ்டு பத்திரப்படுத்தி தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன் ஒரு டீ ஸ்பூன் எடுத்து அதே அள்வில் கற்கண்டுத் தூளையும் சேர்த்து பாலில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு அருமருந்து
வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையை இடித்துச் சாறு எடுத்து தைலமாக்கி தினசரி நெற்றியில் சிறிது தடவி வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும் மூளை வலுப்பெறும்
சில குழந்தைகள் மண் தின்பதால் வயிறு உப்புசமாகிவிடும்.அதனால் ஜீரண சக்தி சரியாக இல்லாமல் அவதிப் படுவார்கள்.இதற்கு இந்த கீரையை மை போல அரைத்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் தரும்.
பொடுகுத் தொல்லைகளில் இருந்து விடுபடவும் முடி உதிர்வதை தடுக்கவும் கரிசலாங்கண்ணி
கீரை உதவுகிறது.தலைமுடியும் நன்கு வளரும்
பொதுவாகவே நல்ல மலம் இளக்கியாகச் செயல்படும் இநத கீரையை பெரியவர்களும் தொடர்ந்து சாப்பிட்டால் ந்ல்ல ஜீரண சக்தியுடன் எந்த நோயும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம்

மேலும் சில பதிவுகள்